மகனுடன் இணைந்து கணவனை பத்து துண்டுகளாக வெட்டிக் கொன்ற பெண்; மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!!
டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலையைப் போன்றே கிழக்கு டெல்லியில் கணவரை மகனுடன் சேர்ந்து பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலையைப் போன்றே கிழக்கு டெல்லியில் கணவரை மகனுடன் சேர்ந்து பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சன் தாஸ். இவரைக் கொன்று உடலை அப்புறப்படுத்துவதற்கு முன்பு பிரிட்ஜில் வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் குற்றவியல் டிசிபி அமித் கோயல் கூறுகையில், ''பூனம் என்பவர் அஞ்சன் தாசை 2017ல் திருமணம் செய்து இருக்கிறார். பூனம் கணவர் கல்லு என்பவர் 2016ல் இறந்துவிட்டார். இதன்பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். அஞ்சன் தாசுக்கு பீகாரில் திருமணமாகி அங்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு செல்லாமல் அடிக்கடி, வீட்டில் பூனத்துடன் சண்டையிட்டு வந்துள்ளார். பூனம், கல்லு தம்பதிகளுக்கு பிறந்த மகன் தீபக்.
இதையும் படிங்க: சபரிமலைக்கு செல்ல வாராந்திர சிறப்பு ரயில்… பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு!!
தாயும், மகனும் அஞ்சனுக்கு மதுவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கச் செய்துள்ளனர். இதையடுத்து கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். ரத்தம் முழுவதும் வடியும் வரை வீட்டில் உடலை வைத்துள்ளனர். பின்னர் பத்து துண்டுகளாக வெட்டியுள்ளனர். பிண வாடை வீசக் கூடாது என்பதற்காக வெட்டிய உடலை பிரிட்ஜில் வைத்து மூடியுள்ளனர். அஞ்சன் தவறான உறவுகளை வைத்து இருந்த காரணத்தினால் தூக்க மாத்திரை கொடுத்து கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரிட்ஜில் வைத்திருந்த உடல்களை ஒவ்வொன்றாக பாண்டவ நகர் பகுதியில் வீசியுள்ளனர். இதில் ஆறு உடல் பாகங்களை மீட்டு உள்ளோம். இன்னும் உடற்பகுதி கண்டறியப்படவில்லை'' என்றார். மேலும் அவர் கூறுகையில், ''அஞ்சனின் கழுத்தை வெட்டுவதற்கு கத்தி மற்றும் கூரான ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: 3 நிமிடம்தானாம்! 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு! நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கவில்லை
கத்தி கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மாட்டப்பட்டிருக்கும் சிசிடிவியில், தீபக் கையில் ஒரு பையை எடுத்துச் செல்வது பதிவாகி இருக்கிறது. கடந்த ஜூன் 5ஆம் தேதி இவரது உடல் பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், கொலை குறித்து விசாரணை நடந்து வந்தது. டிஎன்ஏ சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்தே, தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார். டெல்லியில் இதேபோன்று நடந்த கொலை சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. காதலனே காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசியிருந்தது தெரிய வந்தது. கடந்த மே மாதம் ஒன்றாக வசித்து வந்த அப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரத்தாவை வெட்டி உடல் பாகங்களை 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தக் கொலையும் டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.