சபரிமலைக்கு செல்ல வாராந்திர சிறப்பு ரயில்… பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு  ஹைதராபாத்தில் இருந்து தமிழகம் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

special trains to sabarimalai temple for welfare of the devotees

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு  ஹைதராபாத்தில் இருந்து தமிழகம் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதை அடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் பலர் மாலை போட்டு சபரி மலை வருவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் 1,75,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க: மின்சாரச் சட்டத்திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது சந்தேகம்?

இந்த இரயில் தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை , புனலூர் (சபரிமலை), கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் (கொச்சி) வரை இயக்கப்படுகிறது. இந்தச் சிறப்பு ரயிலுக்கு புனலூர் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின் சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர். 2022 ஆம் ஆண்டு நவ.28 (இன்று) முதல் 2023 ஆம் ஆண்டு நவ.03 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக, ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கொல்லத்திற்கு டிச.05 முதல் 2023 ஆம் ஆண்டு ஜன.09 வரை வாராந்திர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 நிமிடம்தானாம்! 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு! நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கவில்லை

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹைதராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு (07053) வாராந்திர சிறப்பு ரயில் டிச.5 முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 9 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஹைதராபாத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (செவ்வாய்கிழமை) இரவு 11.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். திரும்பும் போது, வாராந்திர சிறப்பு ரயில் (07054) ஒவ்வொரு புதன்கிழமையும் டிச.7 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11 வரை அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கும். இந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில்கள் தமிழ்நாடு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios