3 நிமிடம்தானாம்! 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு! நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கவில்லை
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 10 தொழிற்சங்கங்கள் இன்று புறக்கணித்துள்ளன.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 10 தொழிற்சங்கங்கள் இன்று புறக்கணித்துள்ளன.
ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் 3 நிமிடங்கள் மட்டுமே நிதிஅமைச்சர் ஒதுக்கி இருந்ததால், கூட்டத்தை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன. நிதிஅமைச்சர் செயல்பாடு மலிவான நகைச்சுவை என்று தொழிற்சங்கங்கள் நிர்மலாவை கடுமையாக விமர்சித்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகு! கடும் கொரோனா கட்டுப்பாடுகள்! மக்கள் கொந்தளிப்பு !
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் 3 பிரிவுகளுடன் நடத்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார். தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள், உள்கட்டமைப்புத் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று, 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டை வடிவமைக்க உள்ளார்.
இதற்காக ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியே அழைத்த நிர்மலா சீதாராமன் அவர்களுடன் ஆலோசனை நடத்தி, குறைகளைக் கேட்டறிந்து, தேவைகளை அறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், இன்று(நவம்.28) வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோருடன் 28ம் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த இருந்தார். இதில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 3 நிமிடங்கள் மட்டுமே நிதிஅமைச்சர் ஒதுக்கியதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மாதம் ரூ.4,000சேமிப்பு! ஓய்வுகாலத்தில் ரூ.ஒரு கோடி, ரூ.35,000 பென்ஷன்:திட்டம் பற்றி தெரியுமா?
3 நிமிடங்களில் எதைப்பற்றி ஆலோசிக்க முடியும், என்ன குறைகளைக் கூற முடியும், இது நிதிஅமைச்சரின் மலிவான நகைச்சையாக இருக்கிறது என்று கூறி 10 தொழிற்சங்கங்களும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்துக்கு செல்லாமல் புறக்கணித்தன என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப், எஸ்இடபிள்யுஏ, ஏஐயுடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நிதிஅமைச்சர் நிர்மலாவை நேரடியாகச்சந்தித்து ஆலோசனை நடத்த தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால், அதற்கு அனுமதி மறுத்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி வாயிலாக ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியிருந்தார்.
மகாத்மாகாந்தி ஊரக வேலைவாயப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர்கள் அதிகமானோருக்கு வேலை வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச கூலியை வழங்கிட வேண்டும், கார்ப்பரேட்களுக்கு வரியை உயர்த்த வேண்டும், சொத்துவரியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாருடன் பான் கார்டு இணைத்து விட்டீர்களா? காலக்கெடு முடிகிறது!!
ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம், தொழிற்துறைஅமைப்புகான எப்ஐசிசிஐ, சிஐஐ, தேசிய திறன்மேமபாட்டு கவுன்சில் சிஇஓ ஆகியோருடன் நிர்மலா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.