Asianet News TamilAsianet News Tamil

Electricity Amendment Bill 2022: மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்?

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, 27 லட்சம் மின்வாரிய பொறியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Why do 27 lakh power engineers oppose the Electricity Amendment Bill? What's the deal?
Author
New Delhi, First Published Aug 8, 2022, 2:28 PM IST

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, 27 லட்சம் மின்வாரிய பொறியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மின்சாரச் சட்டம் 62 பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர உள்ளது. இதற்கு கடந்த 3ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த மசோதா இன்றி மக்களவையில் மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் அறிமுகம் செய்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாடுமுழுவதும் உள்ள 2.70 லட்சம் மின் துறை பொறியாளர்களும் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உள்ளனர்.

மகிழ்ச்சி !! நாளை அரசு பொது விடுமுறை.. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. காரணம் இதுதான்..?

Why do 27 lakh power engineers oppose the Electricity Amendment Bill? What's the deal?

ஏன் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு?

இந்த மசோதாவில் கொண்டுவரப்படும் சட்டத்திருத்தத்தின் மூலம் தனியார் மின் துறை நிறுவனங்கள் நுழைந்து மின்பகிர்மானத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கிறது. இதனால் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான மின்சப்ளை நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அதாவது செல்போன் நிறுவனங்களைப் போல் தேவையான நிறுவனச் சேவையைப் பெற முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது

கட்டணம் உயரும்

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணம் திருத்தப்படும், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணம் அறிவிக்கப்படுவது கட்டமயாகும். மின்சார பகிர்மான நிறுவனங்களுக்கு இந்த மசோதா அதிகமான அதிகாரத்தை வழங்கும். தற்போது மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம் ரத்தாக வாய்ப்புள்ளது. மின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் இணையாக கட்டணத்தை உருவாக்க வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன்தோட்டா வரவிருக்கும் சீன கப்பல்... பயணத்தை ரத்து செய்ய இலங்கை வேண்டுகோள்... கேட்குமா சீனா?

Why do 27 lakh power engineers oppose the Electricity Amendment Bill? What's the deal?

27லட்சம் பொறியாளர்கள் எதிர்ப்பு

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் மக்களுக்கும், அரசு மின்பகிர்மான கழகங்களுக்கு எதிராகவும், தனியார் மின்நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது என்று அனைத்து இந்திய மின்துறை பொறியாளர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டுகிறது. இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளது.

அனைத்து இந்திய மின்துறை பொறியாளர்கள் கூட்டமைப்பு செய்தித்தொடர்பாளர் வி.கே.குப்தா கூறுகையில் “ மின்சாரச்சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தால் நாடுமுழுவதும் உள்ள மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் பணியை உடனடியாக நிறுத்துவார்கள். ஒரே இடத்தில் பல நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதன் மூலம் அது தனியார் நிறுவனத்துக்கே சாதகமாக அமையும். அரசு மின்பகிர்மானங்களை பாதிக்கும். ” என எச்சரித்துள்ளார். 

விடாது சீறும் கேசிஆர்.. மீண்டும் மோடியுடன் மோதல்..நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து கடிதம்..

Why do 27 lakh power engineers oppose the Electricity Amendment Bill? What's the deal?

போராட்டம் தீவிரமாகும்

விவசாயிகள் அமைப்பான சம்யூக்தா கிசான் மோர்ச்சாவும் மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராகவும், திரும்பப் பெறவும்தான் கடந்த ஓர் ஆண்டாக போராடி வருகிறோம். இந்த மசோதாவை நிறைவேற்றினால் உடனடியாக நாடுமுழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மின்சாரம் இருந்து மத்தியப்பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்திதான் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால், எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் மத்திய அரசு இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் ஆன சிறுமி.. 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!

Why do 27 lakh power engineers oppose the Electricity Amendment Bill? What's the deal?

பாதிப்பு என்ன?

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கப்படும். மின் கட்டணம் வரம்பின்றி உயரக்கூடும், சமூகத்தின் அடித்தட்டு, நடுத்தர மக்கள்,  சிறு,குறு, நடுத்தரத் தொழில்நடத்துவோர், விவசாயிகள் அனைவரும் பாதி்க்கப்படுவார்கள்.வேளாண்மைக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகும். உள்நாட்டில் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மின்கட்டத்தை தனியார் நிறுவனங்கள் அதிகரிக்கும். மின்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள் பணியையும் இந்த மசோதா பாதிக்கும்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்

அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்புத் தெரிவித்துஎச்சரித்துள்ளார். ட்விட்டர் கெஜ்ரிவால் பதிவிட்ட ட்விட்டில் “ மின்சாரத் திருத்த மசோதா ஆபத்தானது. வெறுப்புடன் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டாம். இந்த மசோதாவால் தனியார் மின்துறை நிறுவனங்கள்தான் அதிகமான லாபம் பெறும். நாட்டில் மின்பற்றாக்குறையை அதிகப்படுத்தும். மக்கள் பாதி்க்கப்படுவார்கள் சில நிறுவனங்கள் மட்டுமே பயன் பெறும். இந்த மசோதாவை கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”எ னத் தெரிவிதுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios