மகிழ்ச்சி !! நாளை அரசு பொது விடுமுறை.. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. காரணம் இதுதான்..?

மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Puducherry govt declares holiday for Muharram

இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை  இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் இந்த திருவிழாவை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடுவர். 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம், ஆண்டின் முதல் மாதம் ஆகும். 

மேலும் படிக்க:தமிழகத்தில் ‘ஆகஸ்ட் 9’ பொது விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு !

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார் என்று கூறப்படுவதும் உண்டு.இந்நிலையில் மொகரம் பண்டிகையையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20 ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:Muharram Festival 2022: தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை சிறப்பு..முகரம் நோன்பின் வரலாற்று முக்கியத்துவம் அறிக...

தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி (நாளை) மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று மொஹரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு, இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios