அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில், 48 சதவீதம் ஆதரவு பெற்று மீண்டும்  மோடியே பிரமராக வாய்ப்பு உள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் பொருட்டு, பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல் குழு, அதாவது  ஐ-பிஏசி, ஆன்லைனில் ஒரு கருத்து கணிப்பு  நடத்தப்பட்டது. 

அடுத்த  பிரதாமர்  யார்..?  குறித்து நடத்தப்பட்ட ஆய்வில்57 லட்சம் பேர் பங்கேற்றனர்.அதில் மோடிக்கு  மட்டும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு  அடுத்த படியாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 11.2 % பேரும், டில்லி  முதல்வராக  உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3%, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 %, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 4.2 %,பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு 3.1 %, பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.