- Home
- இந்தியா
- பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!
குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெறும் 'சோம்நாத் சுவாபிமான் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் பல்வேறு ஆன்மிக மற்றும் வளர்ச்சித் திட்டங்களிலும் பங்கேற்றார்.

சோம்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி
குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்று வரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக மற்றும் பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார். குஜராத்தில் தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளிலேயே அவர் சோம்நாத் வந்தடைந்தார்.
சோம்நாத் வந்த பிரதமர் மோடி, முதலில் ஆலயத்தில் தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் காட்சிகளை பார்வையிட்டார். பின்னர், நூற்றுக்கணக்கான சந்நியாசிகள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்று ‘ஓம்’ ஜபத்தில் இணைந்து தியானம் செய்தார். இந்த தொடர்ச்சியான ஜபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஆன்மிகவாதிகள் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
சோம்நாத் ஆலயம், சிவபெருமானின் 12 ஆதிஜ்யோதிர்லிங்கங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், 1026ஆம் ஆண்டு முகமது கஸ்னி மேற்கொண்ட தாக்குதலுக்கு 1000 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த சுவாபிமான் பர்வ் நடத்தப்படுகிறது. இதனால், ஆலய நகரம் முழுவதும் விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது.
பிரதமர் குஜராத் பயணம்
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சோம்நாத் நகரில் மக்கள் திரளாக சாலைகளில் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோஷங்கள் எழுப்பியபடி, அவரை ஆலயத்திற்கு வரவேற்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் ஷௌர்ய யாத்திரையிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு மீண்டும் ஆலயத்தில் தரிசனம் செய்து, 11 மணிக்கு சோம்நாத் சுவாபிமான் பர்வப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ராஜ்கோட்டிற்கு பயணம் மேற்கொண்டு, வர்த்தக கண்காட்சி மற்றும் மார்வாடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநாட்டைத் திறந்து உரையாற்றினார்.
மாலை 5.15 மணிக்கு, அகமதாபாத் மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் மற்றொரு பகுதியை பிரதமர் திறந்து வைப்பார். ஆன்மிகம் மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்த இந்த பயணம், குஜராத்தின் பண்பாட்டு பெருமையும் வளர்ச்சி வேகமும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

