- Home
- Tamil Nadu News
- பிரதமர் மோடி அப்படிப்பட்ட ஆள் இல்லை.. ஜனநாயகனுக்காக செல்லூர் ராஜு 'வாய்ஸ்' இதுதான்!
பிரதமர் மோடி அப்படிப்பட்ட ஆள் இல்லை.. ஜனநாயகனுக்காக செல்லூர் ராஜு 'வாய்ஸ்' இதுதான்!
சட்டமன்ற தேர்தலுக்காக விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுத்து வருகிறது. ஆனால் அதற்கு அவர் மசியாததால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தணிக்கை வாரியம் மூலம் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்
தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகத்தில் நடித்து முடித்து விட்டார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' நாளை (ஜனவரி 9) வெளியாக இருந்தது. ஆனால் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் இதுவரை சென்சார் சர்டிபிகேட் கொடுக்கவில்லை. இதனால் நாளை வெளியாக இருந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு குவியும் ஆதரவு
சட்டமன்ற தேர்தலுக்காக விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுத்து வருகிறது. ஆனால் அதற்கு அவர் மசியாததால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தணிக்கை வாரியம் மூலம் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்காததற்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வேண்டுமென்றே சட்ட விதிகளை புறம்தள்ளி விட்டு சென்சார் சர்டிபிகேட் வழங்க மறுக்கிறார்கள் என்று பட தயாரிப்பு வாரியம் தணிக்கை வாரியத்துக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு தணிக்கை வாரியம் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாவும், அதன்பிறகு சர்டிபிகேட் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
பிரதமர் மோடி இப்படி செய்ய மாட்டார்
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், ஜனநாயகன் படத்தை முடக்கும் அளவுக்கு பிரதமர் மோடி செயல்பட மாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அப்போது ஜனநாயகன் மூலம் மத்திய அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பிரதமர் மோடி மாபெரும் மனிதர்
இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, ''ஒரு படத்தை தடை விதிப்பதன் மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து விட முடியுமா? விஜய் மட்டுமல்ல; யாருக்கும் அழுத்தும் கொடுத்து அவரை வற்புறுத்தி கூட்டணிக்குள் இழுக்க முடியாது. பிரதமர் மோடி மாபெரும் மனிதர். மோடி இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

