Droupadi Murmu: ஜனாதிபதி திரெளபதி முர்முவின் சோகம் நிறைந்த தனிப்பட்ட வாழ்க்கை

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் கணவர் யார், முர்முவுக்கு எத்தனை குழந்தைகள், அதில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Who is President Thirelapathi Murmu's husband? how many children? how did She lose her two sons,?

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் கணவர் யார், முர்முவுக்கு எத்தனை குழந்தைகள், அதில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ராய்ரங்கபூர் கிராமத்தில் பைடாசாபோசி பகுதியில் பிறந்தவர். ஒடிசா பழங்குடி மக்களில் சாந்தாலி இனத்தில் பிறந்தவர் முர்மு. நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியும், 2வது பெண் ஜனாதிபதியும் என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார்.

பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன்… திரௌபதி முர்மு உறுதி!!

Who is President Thirelapathi Murmu's husband? how many children? how did She lose her two sons,?

ஜனாதிபதி முர்முவுக்கு கடந்த 1980ம் ஆண்டு, ஷியாம் சரண் என்பவரைத் திருமணம் செய்தார். இருவருக்கும் 3 குழந்தைகள் பிறந்தனர். இரு மகன்கள் ஒருமகள் உள்ளனர். லட்சுமண் முர்மு, சிபுன் முர்மு ஆகிய மகன்களும், இட்ஸ்ரீ முர்மு என்ற மகளும் உள்ளனர். 

கடந்த 2014ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக, ஷியாம் சரண் உயிரிழந்தார். ஜனாதிபதி முர்முவின் மூத்த மகன், லட்சுமண் முர்மு கடந்த 2009ம் ஆண்டு தனது 25 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். வீட்டின் படுக்கை அறையில் சுயநினைவின்றி இருந்த லட்சுமண் முர்முவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில் அவர் இறந்தவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஜனாதிபதியாகிறார் திரெளபதி முர்மு: 20ஆயிரம் லட்டு தயார்: சொந்த ஊரில் கொண்டாட்டம் ஆரம்பம்

Who is President Thirelapathi Murmu's husband? how many children? how did She lose her two sons,?

அடுத்த 3 ஆண்டுகளுக்குப்பின், திரெளபதி முர்முவின் 2வது மகன் சிபுன் முர்மு ஒரு விபத்தில் உயிரிழந்தார். தற்போது ஜனாதிபதி முர்முவின் மகள் இட்ஸ்ரீ முர்மு மட்டும் உள்ளார். இவர் ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார்.

ஜனாதிபதி முர்மு ஆரம்பகாலக்கட்டத்தில் ஒடிசா அரசின் நீர்வளத்துறையில், இளநிலை உதவியாளராக இருந்தார். அதன்பின் ஸ்ரீஅரவிந்தோ பள்ளியில் திரெளபதி முர்மு ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு இந்தியா, ஒடியா, கணிதம், புவியியல் பாடங்களை நடத்தினார்.

ராய்ரங்கபூரில் கடந்த 1997ம் ஆண்டு முர்மு பாஜகவில் இணைந்தார். அந்த ஆண்டே திரெளபதி முர்மு ராய்ரங்கபூர் பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு முறை ராய்ரங்கப்பூர் தொகுதியில் போட்டியிட்டு திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். ஒடிசாவில் பிஜூஜனதாதளம் பாஜக கூட்டணி ஆட்சி கடந்த 2000ம் ஆண்டில் நடந்தபோது, போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராகவும், மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புதுறை அமைச்சராகவும் திரெளபதி முர்மு பதவி வகித்தார். 

Who is President Thirelapathi Murmu's husband? how many children? how did She lose her two sons,?

ஒரு ரப்பர் ஸ்டாம்பால் அரசியலமைப்பை காப்பாற்ற முடியுமா.? திரெளபதி முர்மு மீது யஷ்வந்த் சின்ஹா மறைமுக அட்டாக்!

2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு முர்மு தோல்வி அடைந்தார். 2015ம் ஆண்டு முதல் 2021ம ஆண்டுவரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரெளபதி முர்மு நியமிக்கப்பட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios