Asianet News TamilAsianet News Tamil

பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன்… திரௌபதி முர்மு உறுதி!!

பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன் என்று குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

i will work for development of tribal and adivasi brothers and sisters says draupadi murmu
Author
India, First Published Jul 21, 2022, 10:13 PM IST

பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன் என்று குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய அன்னையின் 15வது ஜனாதிபதியாக என்னை தேர்வு செய்ததற்காகவும் இந்தியா முழுவதிலும் உள்ள எனது அனைத்து அரசியல் சகாக்கள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் ஆதரவையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க: நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு... பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி!!

இந்திய ராணுவத்தின் உயர் கமாண்டன்ட் பதவியை அடைய எனக்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெரிய தாய் நாடான இந்தியாவின் மக்களுக்காக பணியாற்ற நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நாளன்று, நான் ஜனாதிபதியானால், முதலில் முழு இந்தியா மற்றும் ஒடிசாவில் உள்ள எனது பழங்குடி மற்றும் ஆதிவாசி சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன் என்று என் மனதில் சத்தியம் செய்தேன்.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து!!

இப்போது அந்த நேரம் வந்துவிட்டது, நான் என் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன். மஹாபிரபு ஸ்ரீ ஜகந்நாதரை நோக்கி நான் தலை வணங்குகிறேன், இன்று வரை நான் அடைந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும், என் ஒவ்வொரு இந்தியத் தாய்க்கும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் உணர்வை இப்போது என்னால் வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios