UPSC புதிய தலைவராக முன்னாள் IAS ப்ரீத்தி சுதன் நியமனம்! நாளை பதவியேற்பு! யார் இந்த ப்ரீத்தி?

UPSC தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் IAS அதிகாரியான ப்ரீத்தி சுதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த ப்ரீத்தி சுதன் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
 

who is Preeti Sudan? she appointed as the New Chairman of UPSC! dee

அண்மையில், UPSC தேர்வு எழுதி IAS, IPSஆக தேர்வு பெற்றவர்கள் போலி சான்றிதழை சமர்பித்ததாக செய்திகள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் UPSC தலைவராக மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். யுபிஎஸ்சி சர்ச்சைக்கும், மனோஜ் சோனி பதவி விலகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல்கள் வெளியாகின.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், UPSC-யின் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளார். 1983 பேட்ச் IAP அதிகாரியும், முன்னாள் மத்திய சுகாதாரச் செயலாளருமான ப்ரீத்தி சுதன், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முதல் (ஆகஸ்ட் 1) பணிகளை தொடர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 1st ஆகஸ்ட் 2024 முதல் UPSC தலைவர் கடமைகளைச் செய்ய, அரசியலமைப்பின் 316வது பிரிவு (1A) -ன் கீழ், UPSC உறுப்பினரான ப்ரீத்தி சுதன் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

பதவிக்காலம் முடியும் முன்பே 'Manoj Soni' ராஜினாமா? அடுத்த UPSC தலைவர் யார்?

யார் இந்த ப்ரீத்தி சுதன்!

ப்ரீத்தி சுதன், 37 வருடம் அரசாங்க நிர்வாக அனுபவம் கொண்டவர். ஜூலை 2020-ல் மத்திய சுகாதார செயலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது ஓய்வு பெற்றார்.

அவரது பதவிக் காலத்தில், கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் ப்ரீத்தி சுதன் முக்கியப் பங்காற்றினார்.மேலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

ப்ரீத்தி சுதன் பொருளாதாரத்தில் M.Phil மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இலிருந்து M.Sc சமூகக் கொள்கை மற்றும் திட்டமிடலில் படித்துள்ளார்.

'Beti Bachao Beti Padhao' (பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ) மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற முதன்மையான திட்டங்களை தொடங்குவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க சட்டங்களை கொண்டுவந்ததும், இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க ஆவண செய்ததும் இதே ப்ரீத்தி சுதன் தான்.

ப்ரீத்தி சுதன், உலக வங்கியில் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் (COP-8) தலைவர் உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

நிலச்சரிவை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி! கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு என்ன ஆச்சு?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios