Asianet News TamilAsianet News Tamil

பதவிக்காலம் முடியும் முன்பே 'Manoj Soni' ராஜினாமா? அடுத்த UPSC தலைவர் யார்?

யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனி பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வுகள் தொடர்பான சர்ச்சைக்கும், இந்த ராஜினாமா தொடர்பு இல்லை என தேர்வுத்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
 

Manoj Soni resigned before the end of his tenure! Who will be the next UPSC chief? dee
Author
First Published Jul 20, 2024, 11:05 AM IST | Last Updated Jul 21, 2024, 11:53 AM IST

Union Public Service COmmission (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) (UPSC) தலைவர் மனோஜ் சோனி தனது பதவிக்காலம் 2029 வரை இருக்கும் போதிலும், முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ம் ஆண்டு UPSC ஆணையத்தில் உறுப்பினராக இணைந்த மனோஜ் சோனி, மே 16, 2023 ஆண்டு தலைவராகப் பதவியேற்றார். மனோஜ் சோனி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்படுமா தெளிவு இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

UPSC சர்ச்சை!

அண்மையில், UPSC தேர்வு எழுதி ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றவர்கள் போலி சான்றிதழை சமர்பித்ததாக செய்திகள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தலைவர் மனோஜ் சோனியும் ராஜினாமா செய்துள்ளார். இதுக்கும் அதற்கும் தொடர்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Flightல பறந்தா உசுருக்கே ஆபத்து... எச்சரித்த மருத்துவர்கள்; மகன் தனுஷுக்காக நெப்போலியன் எடுக்க துணிந்த ரிஸ்க்

மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரொபதி முர்முவிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த யிபிஎஸ்சி புதிய தலைவரின் பெயரை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், மனோஜ் சோனி, குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் அக்‌ஷர்தாமில் தன் ஓய்வு நேரத்தை செலவிட விரும்புவதாக கூறப்படுகிறது. சோனி பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக இருந்து வந்துள்ளார். அவர் 2005-ம் ஆண்டில் வதோதராவின் MS பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவரைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைத்தது பிரதமர் மோடிதான்.

ஜூன் 2017-ல் UPSC க்கு அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே, மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.

Mari Selvaraj : என்னுடையதும் நாடகக் காதல் தான்... மனைவி திவ்யா பற்றி முதன்முறையாக மனம் திறந்த மாரி செல்வராஜ்

UPSC தேர்வுகள்
UPSC என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-323 பகுதி XIV அத்தியாயம் II இன் கீழ் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இந்த ஆணையம் மத்திய அரசின் சார்பில் பல தேர்வுகளை நடத்தி அதன் மூலம் IAS, இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை தேர்வுசெய்கிறது. மேலும், மத்திய சேவைகளான குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகியவற்றிற்கு நியமனம் செய்ய விண்ணப்பதாரர்களை பரிந்துரைக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios