- Home
- Gallery
- Flightல பறந்தா உசுருக்கே ஆபத்து... எச்சரித்த மருத்துவர்கள்; மகன் தனுஷுக்காக நெப்போலியன் எடுக்க துணிந்த ரிஸ்க்
Flightல பறந்தா உசுருக்கே ஆபத்து... எச்சரித்த மருத்துவர்கள்; மகன் தனுஷுக்காக நெப்போலியன் எடுக்க துணிந்த ரிஸ்க்
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு இந்தியா வர வேண்டும் என ஆசையாம், அதை நிறைவேற்ற அவரது தந்தை எடுக்க துணிந்த ரிஸ்க் பற்றி பார்க்கலாம்.

napoleon
ஒரு தந்தை மகன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்க முடியுமா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தன் மகன் தனுஷை தலையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தந்தையாக இருந்து வருகிறார் நெப்போலியன். அவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியலில் எம்.பி ஆகவும் பணியாற்றினார் என்பது பலரும் அறிந்தது. ஆனால் அவரது சொந்த வாழ்க்கை பற்றி பலரும் அறியாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு யூடியூபர் இர்பான் அமெரிக்கா சென்றபோது தான் அவரது குடும்பம் பற்றியும் மகன்கள் பற்றியும் வெளியுலகுக்கு தெரிந்தது.
napoleon house in America
அதிலும் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவரின் சிகிச்சைக்கு இந்தியாவில் போதிய வசதி இல்லாததால் தான் அமெரிக்காவுக்கு சென்றார் நெப்போலியன். மகனுக்காக அமெரிக்கா சென்ற அவர், அங்கேயே செட்டில் ஆகி விட்டதோடு, தற்போது ஐடி கம்பெனி, விவசாயம் என ஒரு பிசினஸ் மேனாகவும் மாறி, கோடி கோடியாய் வருமானமும் ஈட்டி வருகிறார்.
இதையும் படியுங்கள்... அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு
napoleon son
நெப்போலியன் தன் மகன் தனுஷுக்காக சகல வசதிகளுடன் கூடிய அரண்மனை போன்ற வீட்டை அமெரிக்காவில் கட்டி வைத்துள்ளதை பார்த்து பலரும் வியந்து போயினர். இதனிடையே அண்மையில் நெப்போலியன் தனது மகன் தனுஷுக்கு திருமணம் நடத்தி முடிக்க முடிவெடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயமும் செய்து முடித்தார். ஆனால் அந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நெப்போலியன் மகன் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ காலில் பங்கேற்றார்.
napoleon son dhanoosh
நெப்போலியன் மகன் தனுஷ் தன்னுடைய நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ளாததற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் அவரால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. சாலை மார்க்கமாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ தான் பயணம் செய்ய முடியுமாம். தன் மகன் தனுஷ் விமானத்தில் பயணித்தால் அது அவரது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் தனுஷை கடல் வழி பயணமாக இந்தியா அழைத்து வர பிளான் போட்டார் நெப்போலியன்.
Napoleon Love Towards his son Dhanoosh
இதுபற்றி அவரே ஒரு வீடியோவில் கூறி இருந்தார். தனுஷுக்கு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என ஆசை இருப்பதாகவும், அதனால் அவரை கப்பலில் அழைத்து செல்ல தான் முடிவு செய்திருப்பதாக கூறி இருந்தார் நெப்போலியன். கப்பல் வழியாக தனுஷை இந்தியா அழைத்து வர 70 நாட்கள் ஆகுமாம். அதற்காக பிளான் போட்டு வருவதாகவும் நெப்போலியன் அந்த வீடியோவில் கூறி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’ என்கிற பாடல் வரிகளுக்கு சிறந்த உதாரணம் நெப்போலியன் தான் என சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம்... வியக்க வைக்கும் நடிகர் நெப்போலியனின் மறுபக்கம்