நிலச்சரிவை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி! கார் விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு என்ன ஆச்சு?
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில், சுமார் 200 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் 1000 பேர் வரை சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 98 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: என்ன நடக்கிறது கடவுள் தேசத்தில்; மேலும் மேலும் அதிர்ச்சி தகவல்கள்; கோழிக்கோட்டில் நடந்தது என்ன?
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீணா ஜார்ஜ்க்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல் பாகங்கள்! தோண்ட தோண்ட குவியும் சடலங்கள்! பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!
இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.