ராமர் கடவுளே இல்லன்னு சொன்னவருக்கு மத்திய அமைச்சர் பதவியா! பாஜக போடும் கணக்கு என்ன?
1980 முதல் எம்.எல்.ஏ.வாக இருந்த மஞ்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பீகாரின் கயாவில் போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி இடம் பெறுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி 2014-2015 இல் பீகார் முதல்வராக இருந்தார். பீகார் மாநிலத்தின் முக்கியமான தலித் தலைவரான இவர் முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த முதல் முதலமைச்சராக இருந்தார்.
1980 முதல் எம்.எல்.ஏ.வாக இருந்த மஞ்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பீகாரின் கயாவில் போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக நெருங்கிய கூட்டாளியாக இருக்கும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (யுனைடெட்) உட்பட பல கட்சிகளுடன் இணைந்துள்ளார். ஜிதன் ராம் மஞ்சி 1980ல் காங்கிரஸ் வேட்பாளராக அரசியலில் நுழைந்தார். 1980 முதல் 1990 க்கு வரை பீகாரில் காங்கிரஸ் முதல்வர்கள் தலைமையிலான மூன்று அமைச்சரவைகளில் பணியாற்றினார்.
ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்! அசால்டாக வேடிக்கை பார்த்த விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி!
1990க்குப் பிறகு, ஜனதா தளத்திலிருந்து பிரிந்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். 1996 முதல் 2005 வரை, நிதிஷ் குமாரின் ஜே.டி.யூ.வுக்கு மாறுவதற்கு முன்பு பீகார் மாநில ஆர்ஜேடி அரசிலும் அமைச்சராக இருந்தார்.
2021ஆம் ஆண்டில், பிராமணர்களுக்கு எதிரான பேச்சினால் பெரும் சர்ச்சையைத் தூண்டினார். மஞ்சியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மஞ்சியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு தருவதாக அறிவித்தார்.
ஒரு வீடியோவில், தலித்துகள் மத்தியில் வளர்ந்து வரும் சடங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசும்போது, மஞ்சி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
2022ஆம் ஆண்டில்அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சி, ராமர் ஒரு புராணக் கதாபாத்திரம் என்றும் கடவுள் அல்ல என்றும் வலியுறுத்தினார். ராவணன் தான் ராமரை விட உயர்ந்தவன் என்றும் மஞ்சி பேசியிருக்கிறார்.
"தீண்டாமைப் பழக்கத்தைத் தவிர்ப்பதற்கு உயர்சாதி மக்கள் ஏன் முன்மாதிரியாக இருப்பதில்லை? ராமர் கடவுள் என்று நான் நினைக்கவில்லை. அவர் வால்மீகியின் ராமாயணத்திலும் கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய ராமசரித்மனாவிலும் வரும் கதாபாத்திரம். இரண்டு படைப்புகளிலும் மதிப்புமிக்க போதனைகள் உள்ளன" என்று அவர் கூறியிருந்தார்.
முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய எம்.பி.க்கள் ஒருத்தர் கூட இல்ல... பாஜக கூட்டணியின் லட்சணம் இதுதான்!