முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய எம்.பி.க்கள் ஒருத்தர் கூட இல்ல... பாஜக கூட்டணியின் லட்சணம் இதுதான்!
பாஜக கூட்டணியின் 293 எம்.பி.க்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.யோ கிறிஸ்தவ எம்.பி.யோ சீக்கிய எம்.பி.யோ கிடையாது. நாட்டின் சிறுபான்மையினர் சமூகத்தின் பிரதிநிதிகளாக ஆளும் கூட்டணியில் ஒருவர் கூட இல்லை.
3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக இன்று பதவியேற்கிறார். அவருடன் 30 மத்திய அமைச்சர்களும் இன்று பதவியேற்க இருக்கின்றனர். இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியை அமைக்க இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) கட்சிகள் 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த 293 எம்.பி.க்களில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.யோ கிறிஸ்தவ எம்.பி.யோ சீக்கிய எம்.பி.யோ கிடையாது. நாட்டின் சிறுபான்மையினர் சமூகத்தின் பிரதிநிதிகளாக ஆளும் கூட்டணியில் ஒருவர் கூட இல்லை.
புத்த மதத்தை சேர்ந்த ஒரே ஒரு எம்.பி. மட்டும் இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜூவில் மேற்கு அருணாச்சலப் பிரதேச தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளார்.
பாஜக கூட்டணியின் 293 எம்பிக்களில், 33.2 சதவீதம் உயர் சாதியினர் உள்ளனர். 15.7 சதவீதம் இடைநிலை சாதியினர் உள்ளனர். 26.2 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளனர்.
110 லிட்டர் ரத்த தானம் செய்து 693 பேரின் உயிரைக் காப்பாற்றிய இவர் யாரு தெரியுமா?
235 தொகுதிகளை வென்றிருக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இஸ்லாமியர்கள் 7.9 சதவீதம், சீக்கியர்கள் 5 சதவீதம், கிறிஸ்தவர்கள் 3.5 சதவீதம் உள்ளனர். உயர் சாதியினர் 12.4 சதவீதம் உள்ளனர். இடைநிலை சாதியினர் 11.9 சதவீதம் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினர் 30.7 சதவீதம் இருக்கின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளனர். இவர்களில் 21 பேர் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தான். காங்கிரஸ் கட்சியில் இருந்து 7 பேரும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 5 பேரும், சமாஜ்வாதி கட்சியில் இருந்து 4 பேரும் உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) 3, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி (என்.சி.) 2 இஸ்லாமிய எம்.பி.க்களைக் கொண்டுள்ளன. எஞ்சிய 3 பேரில் ஒருவர் அசாதுதீன் ஓவைசி. மேலும் 2 இஸ்லாமியர்கள் சுயேட்சைகளாக்க் களத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
11 பெரிய கட்சிகள் மொத்தம் 82 இஸ்லாமிய வேட்பாளர்களை களமிறக்கின. பாஜக ஒரே ஒரு இஸ்லாமியரை மட்டுமே வேட்பாளராக அறிவித்தது. பஞ்சாபில் 6 சீக்கியர்களையும் பாஜக வேட்பாளர்கள் ஆக்கியது. ஆனால் இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துவிட்டனர். இதனால் பாஜக சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் ஒரு முஸ்லிம் கூட மக்களவைக்குச் செல்லவில்லை.