Asianet News TamilAsianet News Tamil

110 லிட்டர் ரத்த தானம் செய்து 693 பேரின் உயிரைக் காப்பாற்றிய இவர் யாரு தெரியுமா?

68 வயதான ஹென்றி பிக்காஃப் 1975ஆம் ஆண்டு இந்த உன்னத செயலைச் செய்யத் தொடங்கினார். அவரது இரத்தம் 693 பேருக்கு உயிர் காக்கும் உதவியுள்ளது.

Henry Bickoff, aged 68, Has Donated Over 110 Litres Blood in 49 years sgb
Author
First Published Jun 9, 2024, 11:40 AM IST

அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்டைச் சேர்ந்த ஒருவர் 49 ஆண்டுகளில் சுமார் 29 கேலன் (தோராயமாக 110 லிட்டர்கள்) ரத்தத்தை தானம் செய்துள்ளார். 68 வயதான ஹென்றி பிக்காஃப் 1975ஆம் ஆண்டு இந்த உன்னத செயலைச் செய்யத் தொடங்கினார். அவரது இரத்தம் 693 பேருக்கு உயிர் காக்கும் உதவியுள்ளது.

"நான் சிறிது காலமாக அதைச் செய்து வருகிறேன். அதற்காக கொஞ்சம் அங்கீகாரம் பெறுவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

கண் பராமரிப்பு நிபுணரான ஹென்றி கல்லூரியில் படிக்கும்போது முதல் தானம் செய்தார். "எல்லோரும் ரத்ததானம் செய்ய வேண்டும். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும். அதுதான் உலகைக் காப்பாற்றும்" என்று பிக்காஃப் கூறிகிறார். முதல் அனுபவத்தை நினைவுகூரும் அவர், முதல் முறை ரத்தம் கொடுத்த பிறகு போதிய நீர்ச்சத்து உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால், மிகவும் மயக்கமாக இருந்தது என்று கூறினார்.

மத்திய அமைச்சராகும் தெலுங்கு தேசம் கட்சி கோடீஸ்வர எம்.பி.! ரெண்டு பேரை ஓகே செய்த சந்திரபாபு நாயுடு!

ஆனாலும் ஹென்றி ரத்த தானத்தைக் கைவிடவில்லை. "இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் இது எனது முக்கிய தொண்டு செயலாக நான் கருதுகிறேன். இது என்னால் செய்யக்கூடிய ஒன்று. அதிக நேரம் எடுக்காது. நான் இதை ஒரு மல்டிடாஸ்கிங் போலக் கருதுகிறேன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததான மையத்திற்குச் சென்று தானம் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கிறார்.

ஹென்றி பிக்காஃப் பி-நெகட்டிவ் இரத்த வகையைக் கொண்டுள்ளார். இந்த ரத்த வகைக்கு அதிக தேவை உள்ளது. முந்தைய ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வரை, அவர் ஒவ்வொரு 56 நாட்களுக்கும் நன்கொடை அளித்துள்ளார்.

நியூயார்க் ரத்த மையத்தின் மூத்த துணைத் தலைவர் ஆண்ட்ரியா செஃபாரெல்லி கூறுகையில், "நன்கொடையாளர் தளத்தில் 1/2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே 20 கேலன்கள் அல்லது அதற்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். சராசரியாக ஒருவர் தங்கள் வாழ்நாளில் இரண்டு முறை தானம் செய்கிறார்" என்று சொல்கிறார்.

ஹென்றி பிகாஃப்பின் மனைவியும் சில நேரங்களில் இரத்த தானம் செய்கிறார். ஆனால், அவரது மகளுக்கு அரிதான இரத்த நோய் காரணமாக அவர் ரத்ததானம் செய்ய முடியவில்லை, மேலும் மகன் இதில் ஆர்வம் காட்டவில்லையாம். "இது உண்மையில் அவரைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று" என்று ஹென்றியின் மகள் சொல்கிறார்.

குறிப்பாக, ஹென்றி பிக்காஃப், ரத்த தானம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios