Asianet News TamilAsianet News Tamil

பதவியேற்புக்கு முன் டீ பார்ட்டி கொடுக்கும் மோடி! அமைச்சராகப் போகும் எம்.பி.க்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுவதற்கு முன் அமைச்சராகப் பதவியேற்க இருக்கும் எம்.பி.க்களுக்கு பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.

Ahead of swearing in ceremony, PM Modi hosts high tea for would-be ministers sgb
Author
First Published Jun 9, 2024, 1:20 PM IST | Last Updated Jun 9, 2024, 2:09 PM IST

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பிற்பகல் 11.30 மணிக்கு புதிதாக அமைச்சாரகப் பதவியேற்க இருக்கும் எம்.பி.க்களுக்கு பிரதமர் இல்லத்தில் தேனீர் அருந்துக்கு நடைபெற்றது.

பாஜக எம்.பி.க்கள் எஸ். ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், சர்பானந்தா சோனோவால், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று தேநீர் விருந்தில் பங்கேற்பதற்காக மோடியின் லோக் கல்யாண் மார்க் இல்லத்துக்கு வந்தடைந்தனர். ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங் சவுத்ரியும் தேநீர் விருந்துக்கு வந்திருந்தார்.

தெலுங்கானா பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டியும், அக்கட்சியின் தலைவர் பண்டி சஞ்சய்யும் ஒரே காரில் ஒன்றாக வந்தனர். எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானும் விருந்தில் கலந்துகொண்டார். அமித் ஷா, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

முன்னதாக, பாஜக தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, மனோகர் லால் கட்டார், ரக்ஷா கட்சே, நித்யானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா பகீரத் சவுத்ரி மற்றும் ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை பிரதமரின் இல்லத்திற்கு வந்தனர். பாஜக தலைவர்களான ஜிதின் பிரசாத், ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரும் இன்று காலையே பிரதமர் இல்லத்துக்குச் சென்றனர்.

 

மோடி 3.0 அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? எத்தனை புதுமுகங்களுக்கு இடம் கிடைக்கும்?

இந்திய குடியரசுக் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், “பிரதமருக்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது தலைமையில் வரலாறு படைக்கப்படுகிறது" என்றார். தனக்கு எந்த இலாகா கிடைத்தாலும், அதை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடிஜி மூன்றாவது முறையாக பதவியேற்பது நாட்டின் அதிர்ஷ்டம். வளர்ந்த இந்தியா என்ற தீர்மானம் நிறைவேறும்...'' என்றார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், ''இப்போதைக்கு என்னிடம் எந்த தகவலும் இல்லை...'' என்றார்.

இன்று இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் புதிழ அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். விழாவில் மோடி தனது அமைச்சர்களுடன் பிரதமராகப் பதவியேற்பார்.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, டெல்லி காவல்துறை சுமார் 1,100 போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. NSG கமாண்டோக்கள் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய வீரர்களும் ராஷ்டிரபதி பவனில் மெகா நிகழ்வுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

110 லிட்டர் ரத்த தானம் செய்து 693 பேரின் உயிரைக் காப்பாற்றிய இவர் யாரு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios