மோடி 3.0 அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? எத்தனை புதுமுகங்களுக்கு இடம் கிடைக்கும்?
Modi 3.0 cabinet ministers: நரேந்திர மோடி உள்பட மொத்தம் 30 அமைச்சர்கள் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை அமைவதால் கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.
3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளது. தலைநகர் டெல்லியில் மாலை 7.15 மணி பதவியேற்பு விழா நடக்கவிருக்கிறது. இந்நிலையில், புதிய அமைச்சரவையில் பாஜக கூட்டணியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்? என்னென்ன இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிராதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் ஆகியோர் அமைச்சரவையில் நீடிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி உள்பட மொத்தம் 30 அமைச்சர்கள் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!
தென் மாநிலங்களில் இருந்து அமைச்சர் பதவி யார் யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாமல் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இதனால், தமிழக கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஆனால், ஏற்கெனவே மத்திய இணையமைச்சராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சராக புரொமோஷன் கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஒக்கலிகா சமூக வாக்கு வங்கியைக் கவர உதவிய ஜே.டி.எஸ். தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. அவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷி மத்திய அமைச்சராகத் தொடர்வார் என்றும் தெரிகிறது.
என்.டி.ஏ. கூட்டணியில் முக்கியக் கட்சியான தெலுங்கு தேசத்துக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஒரு இணையமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி கிடைக்கும், பி. சந்திரசேகருக்கு நிதித்துறையின் இணையமைச்சர் பதவி கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணையமைச்சர் தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறை ஒதுக்கப்படலாம். சி.எம். ரமேஷுக்கு சுற்றுலாத் துறை இணையமைச்சர் பதவி கிடைக்கலாம். தெலுங்கானாவில் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த ஜி. கிஷன் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சராகும் தெலுங்கு தேசம் கட்சி கோடீஸ்வர எம்.பி.! ரெண்டு பேரை ஓகே செய்த சந்திரபாபு நாயுடு!