தங்களிடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை விடுவிப்பது குறித்து ஓரிருநாட்களில் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை தாக்கி அழித்து விட்டு திரும்பியது இந்திய ராணுவம். இதனால் வெறுப்பான பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்க எல்லை பகுதிக்கு வந்தது. அப்போது அந்த விமானங்களை விரட்டிச் சென்ற 5 விமானங்களில் இரண்டு விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் விமானி அபிநந்தன் சிக்கிக் கொண்டார்.

 

அவர் விடுவிக்கப்பட வேண்டும் என பல நாடுகளும் பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன. இந்திய அரசாங்கமும் அபிநந்தனை மீட்க அரசாங்க அளவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அபிநந்தனை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.