பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட அபிநந்தனுக்கு டெல்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 
 
இந்தியா திரும்பியுள்ள அவர் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சோதனைகள் குறித்து பாதுகாப்பு துறை சீனியர் அதிகாரியான மானோஜ் ஜோஷி ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானிடம் முக்கியமான விஷயங்கள் எதையாவது அபிநந்தன் பகிர்ந்தாரா? பாகிஸ்தான் வசம் இருந்தபோது அவருக்கு மூளை சலவை செய்யப்பட்டதா? 

அவரது உடம்பில் எங்காவது சிப் பொறுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். மயக்க நிலையில் அவர் இருந்தபோது என்ன வேண்டுமானாலும் பாகிஸ்தான் தரப்பினர் செய்திருக்கலாம். விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் தங்களின் வீரர்களை ரா போன்ற புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்து கேள்விகள் கேட்பதில்லை. ஆனால், அபிநந்தன் விவகாரம் முற்றிலும் வேறுபட்டது. ஆகையால் ரா போன்ற அமைப்பு விசாரணை நடத்தக்கூடும். 

இந்தியாவின் பாதுகாப்பிற்காக அபிநந்தன் துணிந்து செயல்பட்டவர். ஆனால், அவரை விசாரிக்க வேண்டியது கட்டாய நடைமுறை. இந்த சோதனைகள் முடிவுக்கு வரும்வரை அபிநந்தன் அவரது பணியில் தொடர அனுமதிக்கபட மாட்டார். அவருக்கு பரிசோதனை முடிந்து ரிஸல்ட் வரும்வரை அவர் காத்திருபோர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.