பாலியல் வழக்கு குறித்து கேட்டதால் ஆத்திரத்தில் பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்துப் போட்ட பிரிஜ் பூஷன்!
பிரிஜ் பூஷன் சிங், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்ட தொலைக்காட்சி நிருபரிடம் ஆத்திரப்பட்டு அவரது மைக்கை உடைத்துவிட்டார்.

பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி நிருபர் ஒருவரிடம் பேசும்போது ஆத்திரத்தில் மைக்கை உடைத்துப் போட்டார்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலின் நிருபருக்கு பிரிஜ் பூஷன் பேட்டி அளித்தார்.
அந்த பெண் நிருபர் சில கடினமான கேள்விகளை முன்வைத்தபோது அவர் பதிலளிக்காமல் அமைதியாகிவிட்டார். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மற்றும் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தொடர்பாக நிருபர் கேட்டபோது, கோபமடைந்து பிரிஜ் பூஷன், “நான் உங்களிடம் எதுவும் சொல்லமுடியாது” என்று பதிலளித்து அங்கிருந்து விலகிச் சென்றார்.
பாக்ஸ்கான் - வேதாந்தா ஒப்பந்த முறிவு: ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்த அமித் மாளவியா
அவரது பதிலில் அதிருப்தி அடைந்த பெண் செய்தியாளர் சிங்கைத் துரத்திச் சென்று, அவரை பாஜக இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் மேலும் எரிச்சலடைந்த பிரிஜ் பூஷன், "உங்களுக்கு வேண்டிய மசாலா பேச்சு எதுவும் என்னிடம் இல்லை" என்று காட்டமாக பதிலளத்தார்.
நிருபர் தொடர்ந்து சென்று அவர் ராஜினாமா செய்வாரா என்று கேட்டபோது, "நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?" என்று கேட்டார். கோபத்தில் குரலை உயர்த்தி, "எதன் அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் சொல்கிறாய். வாயை மூடு" என்று அதட்டினார். பின்ர, அவர் விரைந்து சென்று தனது காரின் உள்ளே சென்று அமர்ந்துகொண்டு, கதவை வேகமாக அடைத்து செய்தியாளரின் மைக்கை உடைத்துப் போட்டார். மைக் தரையில் விழுந்து சேதமடைந்தது.
இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் பார்த்து, பிரிஜ் பூஷனுக்கு உடனடியாக சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். "இதை மீண்டும் சொல்கிறேன். பிரிஜ் பூஷன் சிங் ஒரு ரவுடி. ஒரு பெண் செய்தியாளரிடம் கேமரா முன்பே இப்படி நடந்துகொள்ளும் தைரியம் அவருக்கு இருக்கும்போது, கேமரா வெளிச்சம் இல்லாத பெண்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள்! இந்த ஆளுக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல, சிறையில்தான்!" என்று மாலிவால் ட்வீட் செய்துள்ளார்.