மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!
தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலானி இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பெரிய வித்தியாசத்துடன் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.
பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. 63,229 கிராம பஞ்சாயத்து இடங்கள், 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்கள் மற்றும் 928 ஜில்லா பரிஷத் இடங்கள் உட்பட 74,000 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
"திரிணாமுல் காங்கிரஸ் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது" என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடந்துள்ள இந்த பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதி செய்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்களில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு
சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பல வாக்குச் சாவடிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக பல புகார்கள் எழுந்ததால் திங்கட்கிழமை 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, முர்ஷிதாபாத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. ஹவுராவில் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்ட கும்பலைக் கலைக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை வந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் எதிர்க்கட்சி பார்வையாளர்களை நுழையவிடாமல் தடுத்து, வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் இடம் நோக்கி முடியாதபடி தடுத்து, வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!
ஆனால், தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திரிணாமுல் தலைவர் அபிஷேக் பானர்ஜி, "'மம்தாவுக்கு வாக்களிக்க வேண்டாம்' என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை 'மம்தாவுக்கு வாக்களியுங்கள்' என மாற்றிய மக்களுக்கு நன்றி," என்று கூறினார்.
வன்முறை மற்றும் வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து அறிக்கை அளித்தார். பின்னர் பேசிய அவர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இணைய சமநிலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்