rahul : rahul gandhi: தாய்நாட்டின் சேவைக்காக இணைந்திருப்போம்: ராகுல் காந்தி சுதந்திரதின வாழ்த்து

பாரத நாட்டின் சேவைக்காக நாம் புதிதாக இணைந்திருப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 75-வது சுதந்திரதின வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

We renew our commitment to Indian service:  Rahul Gandhi

பாரத நாட்டின் சேவைக்காக நாம் புதிதாக இணைந்திருப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 75-வது சுதந்திரதின வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 75-வது சுதந்திரதின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின நன்நாளை கொண்டாடி வருகிறார்கள்.

பிரதமர் மோடி சுதந்திர தின தலைப்பாகை ஒரு சிறப்புப் பார்வை

We renew our commitment to Indian service:  Rahul Gandhi

நாடுமுழுவதும் அரசு அலுவலங்கள்,  நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து, மக்களுக்கு உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு சுதந்திரன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

 

அதில் அவர் கூறுகையில் “ இந்தியத் தாய்க்கு, நாங்கள் மிகவும் நேசிக்கும் தாய்மண், பழமையானது, நிரந்திரமானது, எப்போதும் புதிதாக இருக்கக்கூடியது. இதற்கு நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

செங்கோட்டையில் தொடர்ச்சியாக 9வது முறையாக கொடியேற்றும் பிரதமர் மோடி.. புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு.!

 பாரத தாயின் சேவைக்கு எப்போதும் புதிதாக இணைந்திருப்போம். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios