உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவு கூர்ந்து வணக்கங்களை தெரிவித்தார். காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், பாரதியார், வேலு நாச்சியார், விவேகானந்தர், ரவீந்திரநாத் உள்ளிட்டோரின் நினைவுகளை பதிவு செய்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதால் ‘வீட்டுக்கு வீடு தேசியக் கொடி’ திட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த சுதந்திர தனி விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார் 7000 பேர் பங்கேற்றுள்ளனர். விழாவையொட்டி, செங்கோட்டையில் உச்ச கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 1000 கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காட்டும், முக அடையாள கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க;- வெடித்தது சர்ச்சை.. கர்நாடக அரசு பத்திரிகை விளம்பரத்தில் சாவர்க்கர்.. நேரு போட்டோ புறக்கணிப்பு..!
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றிய பிரதமர் மோடி;- சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவு கூர்ந்து வணக்கங்களை தெரிவித்தார். காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், பாரதியார், வேலு நாச்சியார், விவேகானந்தர், ரவீந்திரநாத் உள்ளிட்டோரின் நினைவுகளை பதிவு செய்தார்.
சுதந்திர போராட்டத்தில் இந்திய பெண்கள் தங்களது சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டினர். ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும். அவர்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டும். பழங்குடியினத்தை சேர்ந்த பலரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். போராட்டத்தில் பங்கெடுத்து வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் நினைவுகூர்வோம் நாடு இரண்டாக பிரிக்கப்பட்ட போது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக் கொண்டனர். சுததந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது.
இதையும் படிங்க;- காவி நிறம்! பச்சை நிறக் கோடுகள்! வித்தியாசமான தலைப்பாகை அணிந்து வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி.!
கடுமையான போராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சி பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில் தான் என்பதை நாம் உலகதத்ததிற்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம். புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.