Independence Day 2022: பிரதமர் மோடி சுதந்திர தின தலைப்பாகை ஒரு சிறப்புப் பார்வை
அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தனியாக அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பாரம்பரிய ஆடைகளை அணிந்து வருகிறார். நாகலாந்து முதல் தமிழ்நாடு வரை பாரம்பரிய ஆடைகளை அணிந்து மக்களின் கவனத்தை மட்டுமின்றி, ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தபோது வேட்டி அணிந்து வந்து இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அணிந்து வரும் தலைப்பாகை முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் அவர் தேசியக் கொடியில் இடம் பெற்று இருக்கும் மூன்று வண்ணங்கள் கொண்ட தலைப்பாகை அணிந்து இருந்தார். பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து அவர் உடுத்தும் ஆடை, கண் கண்ணாடி, பயன்படுத்தும் கார் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க;- உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!
அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தனியாக அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பாரம்பரிய ஆடைகளை அணிந்து வருகிறார். நாகலாந்து முதல் தமிழ்நாடு வரை பாரம்பரிய ஆடைகளை அணிந்து மக்களின் கவனத்தை மட்டுமின்றி, ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தபோது வேட்டி அணிந்து வந்து இருந்தார்.
ஆனாலும், சுதந்திர தினத்தன்று அவர் அணிந்து வரும் தலைப்பாகை சிறப்பு கவனத்தை ஈர்த்து வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் தலைப்பாகை அணித்து வருகிறார். அந்த ஆண்டில் ஜோத்பூரி டிசைனில் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்து இருந்தார்.
2015ஆம் ஆண்டில், பல வண்ணங்களில் கோடுகள் நிறைந்த, மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து இருந்தார். 2016ஆம் ஆண்டில் மஞ்சள், பிங்க் நிறத்திலான தலைப்பாகை அணிந்து இருந்தார்.
2017 ஆம் ஆண்டில் பிரதமரின் தலைப்பாகை அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையாக இருந்தது.
2018 ஆம் ஆண்டில் செங்கோட்டையில் தோன்றியபோது, காவி தலைப்பாகை அணிந்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டில், பிரதமர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற தலைப்பாகையுடன் பச்சை நிறத்துடன் கூடிய வெள்ளை குர்தாவை அணிந்து இருந்தார்.
2020ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்திருந்தார். இது அவரது கிரீம் நிற உடைக்கு நல்ல எடுப்பாக காணப்பட்டது.
2021ஆம் ஆண்டில் தாடி வைத்து இருந்தார். மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறத்தில் சிறிய கோடுகள் கொண்ட தலைப்பாகை அணிந்து இருந்தார்.
நடப்பாண்டில், 2022 ஆம் ஆண்டில், அவர் அணிந்து இருந்த தலைப்பாகை மூவர்ண நிறத்தில் இருந்தது. தலைப்பாகையின் பின்புறத்தில் வழக்கம்போல தலைப்பாகை நீண்டு தொங்கிக் கொண்டு இருந்தது. கடந்த ஆண்டு அணிந்து இருந்த ஆடையைப் போன்றே நடப்பாண்டிலும் சாம்பல் நிறத்திலான மேலங்கி அணிந்து வந்து இருந்தார்.
இதையும் படிங்க;- காவி நிறம்! பச்சை நிறக் கோடுகள்! வித்தியாசமான தலைப்பாகை அணிந்து வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி.!