“ ரயில் வாங்கணும், 300 கோடி கடன் கொடுங்க..” வங்கி ஊழியரை பங்கம் செய்த நபர்.. வைரல் ஆடியோ
ரயில் வாங்க ரூ.300 கோடி வேண்டும் என்று வங்கி ஊழியரிடம் ஒரு நபர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

வங்கிகளில் இருந்து வரும் வீட்டு லோன் வேண்டுமா அல்லது கார் லோன் வேண்டுமா அல்லது கிரெடிட் வேண்டும் என்று தேவையில்லாத அழைப்புகள் வந்து பலரையும் எரிச்சலடைய வைக்கின்றன. ஆனால் இதுபோன்ற அழைப்புக்கு, ஒரு நபர் சொன்ன புத்திசாலித்தனமான பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான ஆடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ரயில் வாங்குவதற்கு 300 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று அந்த நபர் வங்கி ஊழியரிடம் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அழைப்பின் ஆடியோ பதிவில், அந்த நபர் நிஷா என்ற வங்கி ஊழியருடன் உரையாடுவது தெரிகிறது. வங்கியில் இருந்து கடனைப் பெற ஆர்வமாக உள்ளாரா என்று நிஷா கேட்கிறார். அப்போது அந்த நபர், ஆம், ஒரு ரயில் வாங்குவதற்காக கடன் வேண்டும் என்று பதில் சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷா, மறுபடியும் கேட்க, ஆம். மேடம், ரயில் வாங்குவதற்காக ரூ. 300 கோடி கடன் வேண்டும் என்று இயல்பாக கேட்கிறார். இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த நிஷாவுக்கு, இந்த வினோதமான முன்மொழிவுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியிருக்கிறீர்களா என்று ஊழியர் கேட்டார். அதற்கு அந்த நபர், ஹீரோ சைக்கிள் வாங்க, ரூ.1600 கடன் வாங்கியதாக கூறுகிறார். ஆனால் அத்துடன் அந்த ஆடியோ கிளிப் முடிவடைகிறது. விரைவில் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வேடிக்கையான சம்பவத்திற்கு பலரும்தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல பயனர்கள், அந்த புத்திசாலித்தனத்தையும் துணிச்சலையும் பாராட்டினர், இது போன்ற தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொள்ளும் வங்கி ஊழியர்களுக்கு இது தேவை தான் என்றும் சில பதிவிட்டு வருகின்றனர்.
“என் காதலன் Happy-யா இருந்தா போதும்” சூனியம் வைக்க ஆபிஸில் இருந்து ரூ.5 கோடி பணத்தை திருடிய பெண்..