Asianet News TamilAsianet News Tamil

“என் காதலன் Happy-யா இருந்தா போதும்” சூனியம் வைக்க ஆபிஸில் இருந்து ரூ.5 கோடி பணத்தை திருடிய பெண்..

தனது காதலன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அலுவலகத்தில் இருந்து ரூ.5 கோடி பணத்தை திருடிய சீனப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chinese woman who stole Rs 5 crore from the office for black magic, arrested
Author
First Published Jul 26, 2023, 11:09 AM IST | Last Updated Jul 26, 2023, 11:10 AM IST

சீன பெண் ஒருவர் தனது காதலனுடன் வலுவான உறவை தொடரவும், தங்களின் காதல் உறவில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் தனது அலுவலகத்தில் இருந்து சுமார் ரூ.5 கோடி (5,54,21,589.50 ரூபாய்) பணத்தை திருடி உள்ளார். அந்த பணத்தை தனது காதலனை மகிழ்ச்சியாக வைத்திருக்க சூனியம் செய்ய அவர் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட புத்தகக் காப்பாளர், தனது முதலாளியின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அந்த பெண் தற்போது என்ன தண்டனையை எதிர்கொள்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே அப்பெண், நிறுவனத்தின் பணத்தை திருட தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தனது காதலனை இழக்கும் தருவாயில் இருந்ததாகவும், அவரை தனது பாசத்தில் வைத்திருக்கும் நோக்கத்தில் சூனியம் உள்ளிட்ட செயல்களுக்காக அப்பெண் அந்த பணத்தை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அப்பெண்ணின் முதலாளி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நிறுவனத்தின் கணக்கில் அசாதாரணமான எதையும் கவனிக்கவில்லை. அதன்பின்னரே தனது நிறுவனத்தில் ஏதோ தவறு நடப்பதை கண்டறிந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போது, அவர் திருடப்பட்ட பணத்தில் வாங்கிய ஏராளமான டிசைனர் பைகள் மற்றும் துணிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தனது பிரச்சனைக்குரிய காதல் வாழ்க்கைக்கான தீர்வுகளுக்காக ஆசைப்பட்ட வாங், ஆன்லைனில் ஜோசியம் மற்றும் ஜாதக விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தனது விருப்பங்களை நிறைவேற்ற மத சடங்குகளை நம்ப தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். தான் நம்பியது போலவே சூனியம் தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்ததாகவும் அலுவலகப் பணத்தை முறையற்ற முறையில் செலவழித்ததற்காக கைது செய்யப்பட்ட போதிலும் தனது உறவைப் பாதுகாத்தது என்று வாங் கூறியுள்ளார்.

மிரட்டும் மெர்ஸ் கோரோனா வைரஸ்! ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios