பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்தார். 

அமைதியை வலியுறுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். லாகூரில் இருந்து தரைமார்க்கமாக பஞ்சாப் எல்லையில் வாகா எல்லையை வந்தடைந்த விங் கமாண்டர் அபினந்தன், ரெட் க்ராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது குறித்து தெரியவில்லை. அவரை வரவேற்க அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

விங் கமாண்டர் அபினந்தன் பெற்றோரான, தந்தை விமான வீரர் வர்தமன், தாய் மருத்துவர் சோபனா அபினந்தனை வரவேற்க சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்த போது, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பெரும் மரியாதை அளித்தனர்.

அவர்கள் அத்தாரிக்கு தனது மகனை வரவேற்பதற்காக வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா வசம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட உள்ளார். இந்நிலையில், அவர் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார்.