ஆர்டிஐ மனுவில் கிடைத்த தகவலின்படி, " ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2019, நவம்பர் 30-ம் தேதி நிலவரப்படி விவிஐபி-க்களை அழைத்துச்செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.822 கோடி நிலுவையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் சார்பில் 2019, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.526.19 கோடிக்கு விமான டிக்கெட்டுகளை அரசு அதிகாரிகள் கடனாகப் பெற்றுள்ளனர். அதில் ரூ.236க கோடி கடந்த 3ஆண்டுகளாகச் செலுத்தப்படாமல் இருக்கிறது. இதில் ரூ.281.82 கோடி மீட்க முடியாத தொகையாகவே பார்க்கிறோம் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடனுக்கு டிக்கெட் வாங்குவது அதிகரித்து வருவதையடுத்து, அரசு அதிகாரிகளுக்குக் கடனுக்கு விமான டிக்கெட் வழங்கும் முறையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியது. ஏராளமான கோடிகள் நிலுவையில் இருப்பதால் கடனுக்கு டிக்கெட் வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது

சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை, புலனாய்வுப் பிரிவு, சிஆர்பிஎப், தபால் துறை, ரிசர்வ் வங்கி ஆகியவைதான் அதிகமான நிலுவைத் தொகையை வைத்துள்ளனர்.