Voter list with strange names!

மேகாலய மாநிலம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உலகின் பல்வேறு நாட்டின் பெயர்கள், இந்திய மாநிலங்களின் பெயர்கள், நாட்களின் பெயர்கள், கடல்களின் பெயர்கள் என பல்வேறு வினோதமான பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேகாலய மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலை, மேகாலய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது.

இந்த மாநிலத்தைச் சேர்ந்த 'செல்லா' சட்டமன்ற தொகுதி, இந்தியா - வங்காளதேச எல்லையில் உள்ளது. இந்த தொகுதியில் உள்ள 'எலகா' கிராமத்திலும் வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால், மேகாலய அரசு வெளியிட்ட அந்த பட்டியலிலோ, வினோத பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

அந்த வாக்காளர் பட்டியலில், உலகின் பல்வேறு நாட்டின் பெயர்களும், இந்திய மாநிலங்களின் பெயர்களும், கடல்களின் பெயர்களும், நாட்களின் பெயர்களும், கோள்களின் பெயர்களும், கண்டங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

அதாவது, இத்தாலி, அர்ஜென்டினா, சுவீடன், ஜெருசலேம், இந்தோனேசியா என்று நாட்டின் பெயர்களும், திரிபுரா, கோபால என்று இந்திய மாநிலங்களின் பெயர்களும், அரேபியன் சீ, பசுபிக் என கடல்களின் பெயர்களும், சண்டே, தேர்ஸ்டே எனவும், வீனஸ், சாட்டர்ன் எனவும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விநோத பெயர்கள் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். இது அனைத்தும் வாக்காளர்களின் பெயர்கள்தான். எலகா கிராமத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு வினோதமான பெயர்களில் ஏராளமான வாக்காளர்கள் உள்ளனர்.