“பரிசுகள் வேண்டாம்.. பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள்..” திருமண அழைப்பிதழில் மணமகனின் தந்தை வேண்டுகோள்..

தெலுங்கானாவில் மணமகனின் தந்தை ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் பரிசுகளை வழங்க வேண்டாம் என்றும் அதற்கு பதில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Vote for Pm Modi, Instead of gifts says Telangana groom's dad in wedding card Rya

தெலுங்கானாவில் மணமகனனின் தந்தை ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் பரிசுகளை வழங்க வேண்டாம் என்றும் அதற்கு பதில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்குமாறு விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகண்டி நரசிம்மலு - நந்திகண்டி நிர்மலா தங்கள் ஒரே மகனுக்கு திருமணம் செய்ய உள்ளனர். இந்த தம்பதியின் மகன் சாய் குமார் - மஹிமா ஜோடிக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆம் தனது மகனின் திருமணத்திகு வருபவர்களிடம் பரிசுப் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று மணமகனின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

யானைக்கும் யானைக்கும் சண்டை.. கோயில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ..

ஆனால், திருமண அழைப்பிதழில், வரும் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தான் மகனின் திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று மணமகனின் தந்தை திருமண பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல யோசனை என்றும் திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே சிறந்த பரிசு என்று அச்சிடுமாறும் தனது குடும்பத்தினர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நரசிம்மு தனது இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போது எந்த கோரிக்கையையும் அவர் வைக்கவில்லை. ஆனால் தற்போது தனது மகன் திருமணத்தில் அவர் இதுபோன்ற வித்தியாசமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அசிங்கமான நிலையில் அயோத்தி ரயில் நிலையம்! துப்புரவு ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம்!

எனினும் திருமண பத்திரிகையில் மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்கப்படும் சம்பவம் நடப்பது இது முதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் மோடிக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. உஜ்ஜைனியின் தௌலத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வியாபாரி பாபுலால் ரகுவன்ஷி தனது வீட்டில் திருமணத்தின் போது பிரதமர் மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios