இந்தியக்‍ கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு முன்னாள் தலைமை கணக்‍கு தணிக்‍கை அதிகாரி 

வினோத் ராய் தலைமையில் 4 நிர்வாக உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கலைந்து 

புதிய விதிமுறைகளை உருவாக்‍க உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

 திரு. ஆர்.எம். லோதா தலைமையில், ஆய்வுக்‍குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்.

லோதா குழு முன்வைத்த விதிமுறைகளையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தாமல்

 BCCI வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தது.

இதனைத்தொடர்ந்து, BCCI தலைவர் அனுராக்‍ தாக்‍கூரை உச்சநீதிமன்றம் பதவி நீக்‍கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, முன்னாள் தலைமை கணக்‍கு தணிக்‍கை 

அதிகாரி வினோத்ராயை தலைவராக நியமித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வினோத் ராயுடன், ராமச்சந்திர குஹா, விக்‍ரம் லிமாயே மற்றும் மகளிர் கிரிக்‍கெட் அணியின் 

முன்னாள் கேப்டன் டயானா எதுல்ஜி ஆகியோரை நிர்வாக உறுப்பினர்களாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது