Asianet News TamilAsianet News Tamil

"நீ பாகிஸ்தானி... " பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட உபர் கார் டிரைவர்! வைரல் வீடியோ!

 தனது நண்பர் டெல்லி மக்களைப் பற்றி பொதுவான கருத்தையே தெரிவித்ததாகவும், அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்தப் பெண் விளக்கம் கொடுக்கிறார். டிரைவர் தான் கூறியதை தவறான எடுத்துக்கொண்டிருக்கிறார் என அந்த இளைஞரும் கூறுகிறார்.

Video Shows Uber Driver Hurling Hateful Slurs At Passengers In Delhi sgb
Author
First Published Aug 11, 2024, 11:27 PM IST | Last Updated Aug 12, 2024, 7:09 AM IST

டெல்லியில் உபர் கார் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை திடீரென காரில் இருந்து கீழே இறக்கிவிட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஓட்டுநர் தன் காரில் வந்த பயணிகளைப் பார்த்து வெறுப்பைக் கக்கும் வகையில் பேசுவதையும் கேட்க முடிகிறதமு.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. "நீ ஒரு பாகிஸ்தானி *******. ஆமாம், நீயும்தான்" என்று பயணிகளை நோக்கி அந்த கார் டிரைவர் கத்துகிறார். வீடியோ பதிவு செய்யும் பெண், "இவர் எங்களை நள்ளிரவு 12.30 மணிக்கு சாலையில் விட்டுச் சென்றுவிட்டார். இதுதான் மோடிஜியின் இந்தியா" என்று கூறுவதை வீடியோவில் கேட்கலாம்.

காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் இருவரும் பேசிக்கொண்டிருந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் உள்ளவர்களையும் பாகிஸ்தானில் உள்ள தனது உறவினர்களையும் பற்றி தன் தோழியிடம் கூறி இருக்கிறார். அதைக் கேட்ட ஓட்டுநர் ஆத்திரம் அடைந்து வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.இழந்தார்.

பிரசவத்துக்கு வந்த கர்ப்பணியின் வயிற்றில் துண்டை வைத்துத் தைத்த டாக்டர்கள்!

காருக்குள் டிரைவருடன் நடந்த வாக்குவாதம் வைரல் வீடியோவாகப் பரவி வருகிறது. பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அதை பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணுடன் பயணித்த நண்பர் கூறிய கருத்துக்கு ஓட்டுனர் எதிர்ப்பு தெரிவிப்பதை வீடியோவில் காணலாம்.

"வார்த்தையைக் அளந்து பேசுங்க" என்று டிரைவர் எச்சரிப்பதும் வீடியோவில் உள்ளது. தனது நண்பர் டெல்லி மக்களைப் பற்றி பொதுவான கருத்தையே தெரிவித்ததாகவும், அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அந்தப் பெண் விளக்கம் கொடுக்கிறார். டிரைவர் தான் கூறியதை தவறான எடுத்துக்கொண்டிருக்கிறார் என அந்த இளைஞரும் கூறுகிறார்.

இருப்பினும், டிரைவர் கோபமடைந்து, நள்ளிரவில் இருவரையும் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் இந்தக் கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தன்னை அதிர்ச்சி அடைய வைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பலரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios