பிரசவத்துக்கு வந்த கர்ப்பணியின் வயிற்றில் துண்டை வைத்துத் தைத்த டாக்டர்கள்!
28 வயதான அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இது குறித்து மருத்துவமனையில் புகார் கூறியம்போது, மருத்துவர்கள் மருந்துகளை எழுதிக்கொடுத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்கள்.
அலிகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிரசவத்தின்போது வயிற்றில் டவலை வைத்துத் தைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் உடல்நிலை மோசமடைந்த பின்னரே இந்தத் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதிகப்பட்ட பெண்ணுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்தப் பெண்ணை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரது வயிற்றில் இருந்து துண்டு அகற்றப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, மருத்துவர்களின் அலட்சியம் குறித்து விசாரிக்க தலைமை மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் நீரஹ் தியாகி கூறுகையில், "அறுவை சிகிச்சையின்போது அலட்சியமாக இருப்பது, சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பது என மருத்துவமனை மீது எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
யார் இந்த டி. வி. சோமநாதன்? மத்திய அமைச்சரவை செயலாளரான தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி!!
விகாஸ் குமாரின் மனைவி பிரசவத்திற்காக அலிகார் ஜிடி சாலையில் உள்ள ஷிவ் மஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் கவனக்குறைவாக பெண்ணின் வயிற்றுக்குள் ஒரு துண்டை வைத்துத் தைத்துவிட்டனர்.
28 வயதான அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இது குறித்து மருத்துவமனையில் புகார் கூறியம்போது, மருத்துவர்கள் மருந்துகளை எழுதிக்கொடுத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்கள். பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து குடும்பத்தினர் மற்றொரு மருத்துவமனையின் உதவியை நாடினர். அங்கு வயிற்றில் துண்டு வைத்துத் தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
"எனது மனைவியின் இரண்டாவது அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் இருந்து துண்டு அகற்றப்பட்ட வீடியோவை சுகாதாரத் துறையிடம் வழங்கியுள்ளேன். அவர் இன்னும் குணமடையவில்லை. உயிருக்கே ஆபத்தான இந்தத் தவறைச் செய்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விகாஸ் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு செபியின் நம்பகத்தன்மை மீதான தாக்குதல்: மாதபி புரி புட்ச் கண்டனம்