ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு செபியின் நம்பகத்தன்மை மீதான தாக்குதல்: மாதபி புரி புட்ச் கண்டனம்
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள புட்ச் தம்பதி, ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றத என்றும் உண்மையல்ல என்றும் கூறியுள்ளனர்.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை செபியின் தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஹிண்டன்பர்க் கூறும் குற்றச்சாட்டுகள் செபியின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளனர்.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிதிகளில் செபி (SEBI) தலைவரும் அவரது கணவரும் வெளியிடப்படாத முதலீடுகளைக் கொண்டிருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த முதலீடுகள் அதானியின் நிறுவனத்திற்கு எதிராக செயல்பட செபிதைத் தடுத்திருக்கலாம் என்றும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள புட்ச் தம்பதி, ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றத என்றும் உண்மையல்ல என்றும் கூறியுள்ளனர். அவர்களின் நிதி பரிவர்த்தனைகள் எப்பொழுதும் வெளிப்படையானதாக உள்ளன என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் சித்துவேலை செய்த அமெரிக்கா! நடந்தது இதுதான்.. ஷேக் ஹசீனா ஓபன் டாக்!!
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015இல் இருவரும் சிங்கப்பூரில் வசிக்கும்போது, அதாவது மாதாபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பும் செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் எந்த அதானி குழும நிறுவனத்தினத்திலும் முதலீடு செய்யவில்லை என புட்ச் தம்பதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெர்முடா மற்றும் மொரீஷியஸில் உள்ள நிறுனங்களிலும் மாதாபி பூரி புச் தனது கணவருடன் சேர்ந்து முதலீடு செய்துள்ளார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டையும் புட்ச் தம்பதி மறுத்திருக்கிறது. எந்த நேரத்திலும் அதானி குழுமத்துடன் தொடர்புடைய எந்தவொரு பத்திரத்திலும் முதலீடு செய்யவில்லை என்று அவர்கள் விளக்குகின்றனர்.
இரவையும் பகலையும் பிரிக்கும் மெல்லிய கோடு! நாசா வெளியிட்ட பூமியின் அபூர்வமான புகைப்படம்!!