எல்லாம் கால கொடுமை.. தக்காளியை பாதுகாக்க பவுன்சர்ஸ் - தரமான சம்பவம் செய்யும் Tomato!
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கனமழையும் அதனால் ஏற்படும் குறைந்த வரத்துமே இதற்கு மாபெரும் காரணிகளாக அமைகிறது.

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தக்காளி தரமான, சிறப்பான பல சம்பவங்களை செய்து வருகிறது. தினமும் 20லிருந்து 30 ரூபாய் வரை விலை ஏற்றம் தொடர்ச்சியாக பெற்று வருகிறது தக்காளி என்றால் அது மிகையல்ல.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கனமழையும் அதனால் ஏற்படும் குறைந்த வரத்துமே இதற்கு மாபெரும் காரணிகளாக அமைகிறது. 1 கிலோ தக்காளி சுமார் 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொன்று இலவசம்.. குவிந்த மக்கள்.. கடுப்பான கலெக்டர்!
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் அஜய் என்கின்ற வியாபாரி தனது கடைகளில் இருந்து தக்காளிகளை திருடி செல்லாமல் இருக்கவும், வேண்டுமென்றே அங்கு நின்று பேரம் பேசுபவர்களை கலைத்து விடவும் இரு பவுன்சர்களை நியமித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான ஒரு வீடியோவும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது, இது குறித்து பேசிய அஜய் தக்காளியின் விலை அதிகமாக இருப்பதால் பலர் அதை திருடிச் செல்லவும் செய்கிறார்கள். ஆகையால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் இந்த பவுன்சர்களை நியமித்துள்ளதாக கூறியுள்ளார்.
திமுக நிர்வாகி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு இலவச தக்காளி!