பெரிய நிறுவனங்கள் எல்லாம் உங்களைத்தான் தேடுறாங்க! தமிழர்களுக்கு ஐஸ் வைக்கும் வேதாந்தா அனில் அகர்வால்!
தமிழ்நாட்டின் மக்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளனர் என வேதாந்தா குழுமத்தின் நிறுவன தலைவர் அனில் அகர்வால் பாராட்டியுள்ளார்.
உலகளவில் பெருநிறுவனங்களில் தமிழ்நாட்டின் மக்கள் முன்னணியில் உள்ளனர் என்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் நிறுவன தலைவர் அனில் அகர்வால் பாராட்டியுள்ளார். தமிழக மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அகர்வால் அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டியுடன் இணைந்து சென்னையில் சுரானா குழும நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சுரானா ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளியைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடம் பேசிய அகர்வால், “இன்று நான் இளைஞர்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் குறிப்பாக உங்களுக்காகவே வந்துள்ளேன். அரசியலாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள்தான் வழிநடத்தப் போகிறவர்கள்."
சிங்க வாழிடங்களை பாதுகாக்க உழைக்கும் ஊழியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
“தமிழ்நாட்டிற்கு நான் வருவதென்பது ஒரு கனவு. இது மிகவும் சிறப்பான வாய்ப்புகள் உள்ள இடம், ஆன்மிகத்தின் பூமி. நீங்கள் எதைப் பற்றி பேசினாலும் அதில் தமிழ்நாட்டுக்கு உரிய இடம் உண்டு'' என்று அனில் அகர்வால் கூறியுள்ளார்.
“இந்த மாநிலம் எப்படி எல்லோரையும் விட முன்னால் உள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் அதிக உற்பத்தி இங்கிருந்துதான் வருகிறது. உலகில் எங்கும் பயன்படுத்தப்படும் சிறந்த ஜவுளிகள் இங்கிருந்து தயாரிக்கப்படுகின்றன" என்று அகர்வால் கூறினார்.
சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய படங்களை வெளியிட்டது இஸ்ரோ!
அமெரிக்காவில் உள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு ஜான் வேண்டாம், ஒரு ராகவன் தான் வேண்டும் என்றார். பொழுதுபோக்கு துறையிலும் தமிழகம் முன்னேறி வருகிறது என்றார் அகர்வால்.
“நான் இந்த மாநிலத்தில் இருந்திருக்கிறேன், ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். தூத்துக்குடியில் மிகப்பெரிய காப்பர் பிசினஸை நிறுவியிருந்தேன். மேட்டூரில் உள்ள மிகப்பெரிய மெட்ராஸ் அலுமினிய ஆலை, மேட்டூரில் சிறந்த பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகிறோம்'' என்றார்.
"தமிழ்நாடு ஒரு சுவாரஸ்யமான நிலம். இந்த நிலத்தை நான் எப்போதும் கர்ம பூமியாகவே காண்கிறேன்" என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் கூறினார்.
சிறுவர்களின் ஆபாசப் படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த பிரிட்டன் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை!