சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய படங்களை வெளியிட்டது இஸ்ரோ!
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரனில் தரையிறங்குவதை நோக்கி வெற்றிகரமாக முன்னேறி வரும் சந்திரயான்-3 விண்கலம் விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பைப் படம்பிடித்துள்ளது. இந்தப் புதிய படத்தை இஸ்ரோ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இத்துடன் சந்திரயான்-3 விண்கலம் ஏவட்டப்போது எடுக்கப்பட்ட பூமியின் படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, இரண்டு படங்களையும் இணைத்துள்ளது. அதில், முதல் படம் விண்கலம் ஏவபட்ட அன்று லேண்டர் இமேஜர் கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பூமியின் தோற்றம் என்றும் இரண்டாவது படம் சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைவதற்கு முன் லேண்டரில் உள்ள எல்.ஹெச்.வி.சி (LHVC) எ்ன்ற கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் தோற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சந்திரயான்-3 எடுத்த நிலவின் மேற்பரப்பைக் காட்டும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பிறகு, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பை முதல் முறையாகப் படம் பிடித்தது. அதனை ஆகஸ்ட் 6ஆம் தேதி இஸ்ரோ ட்விட்டரில் பதிவிட்டது.
7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்
ஞாயிற்றுக்கிழமை சந்திரயான்-3 விண்கலகத்தை நிலவை நோக்கி நகர்த்தும் இரண்டாவது செயல்முறை நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சந்திரயான்-3 சந்திரனின் மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கிறது.
"சந்திரயான்-3 இன் சுற்றுப்பாதை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட நகர்வு மூலம் 174 கிமீ x 1,437 கிமீ தொலைவுக்குக் குறைக்கப்பட்டது. அடுத்த நகர்வுக்கான நடவடிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது” என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 16 அன்று, சந்திரயான்-3 100 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நுழையும். ஆகஸ்ட் 17 அன்று, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து செல்லும். தரையிறங்கும் தொகுதி பிரிந்ததும், அதனை 30 கி.மீ. x 100 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு இஸ்ரோ நகர்த்தும். அங்கிருந்து ஆகஸ்ட் 23 இறுதி தரையிறக்கம் முயற்சி செய்யப்படும்.
சிறுவர்களின் ஆபாசப் படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த பிரிட்டன் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை!