7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்

மத்திய அரசு அளிக்கும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 7.5 லட்சம் பேர் ஒரே தொடர்பு எண்ணைக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

PMJAY registration: CAG reports 7.5 lakh recipients linked to single number

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே தொடர்பு எண்ணைக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

7,49,820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே தொடர்பு எண்ணை அளித்திருப்பதாகவும் 7.5 லட்சம் பயனாளிகள் கொடுத்த ஒரே தொடர்பு எண்ணும் போலியானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 8888888888 என்ற ஒரே தொடர்பு எண் 1,39,300 பயனாளிகள் கொடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

9000000000 என்ற ஒரே எண்ணை 96,046 பேர் தொடர்பு எண்ணாக அளித்து மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 9 லட்சம் பேர் தொடர்பு எண் எதுவும் கொடுக்காமலும் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஓய்வூதியதாரர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

சந்திரயான்-3 இல் சென்சார், விக்ரம் லேண்டர் பழுதானால் என்ன ஆகும்? இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

PMJAY registration: CAG reports 7.5 lakh recipients linked to single number

36 வழக்குகளில் 18 ஆதார் எண்களுக்கு எதிராக இரண்டு பதிவுகளும், தமிழகத்தில் 7 ஆதார் எண்களுக்கு எதிராக 4,761 பதிவுகளும் செய்யப்பட்டன. ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தகுதியில்லாத குடும்பங்கள் PMJAY பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுகாதாரத் திட்டத்தின் பலன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

2017 முதல் 2021 வரை 2,103 பேருக்கு அவர்கள் இறந்த பின்னரும் மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. 18 ஆதார் எண்களில் இரண்டு பதிவுகள் கொண்ட 36 பேரின் பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் 7 ஆதார் எண்களுக்கு எதிராக 4,761 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 7.87 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு 2018ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் தகுதிநீக்கம்! முன்கூட்டியே ஆட்சியைக் கலைக்கும் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios