உலக சிங்கங்கள் நாளை முன்னிட்டு இந்தியாவில் சிங்க வாழிடங்களை பாதுகாக்க உழைப்பவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சிங்க தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் உழைக்கும் அனைவரின் அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாகக் கூறியுள்ளார். சிங்கங்களின் படங்களையும் பிரதமர் மோடி தனது பதிவில் இணைத்துள்ளார்.

“உலக சிங்க தினம் என்பது நம் இதயங்களை வலிமையுடனும் மகத்துவத்துடனும் கவர்ந்திழுக்கும் கம்பீரமான சிங்கங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்." என்று கூறியுள்ள பிரதமர் மோடி, ஆசிய சிங்கங்களின் தாயகமாக இந்தியா பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளாளர்.

சந்திரயான்-3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

Scroll to load tweet…

"கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவற்றை நாம் தொடர்ந்து போற்றிப் பாதுகாப்போம், அவை வரும் தலைமுறைகளுக்கும் செழித்து வளர்வதை உறுதி செய்வோம்" எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர்களின் ஆபாசப் படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த பிரிட்டன் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை!