மந்தமான வந்தே பாரத் ரயில்கள்! வேகக் குறைப்புக்குக் காரணம் என்ன? ஆர்.டி.ஐ. பதிலில் விளக்கம்!

"மழைக்காலங்களில் அனைத்து ரயில்களுக்கும் அதிகபட்ச வேகத்தை 75 கிமீ அளவில் வைத்திரும்பபது மிகவும் சவாலானது" என்றும் ரயிர்வே அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

Vande Bharat Express Average Speed Down From 84 Kmph To 76 Kmph In 3 Years: RTI sgb

வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம் 2020-21 ஆம் ஆண்டில் மணிக்கு 84.48 கிமீ ஆக இருந்தது. இது 2023-24 ஆம் ஆண்டில் மணிக்கு 76.25 கிமீ ஆக குறைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் மட்டுமின்றி, மற்ற பல ரயில்களின் வேகமும் குறைந்துள்ளது. இந்த வேகக் குறைப்பு தான் பெரிய உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதுதான் என்றும் ரயில்வே கூறியுள்ளது. இது தவிர, புவியியல் காரணங்கள் அல்லது தீவிர வானிலை நிலவரமும் வேகக் கட்டுப்பாடுகளுக்குக் காரணம் என்றும் கடினமான நிலப்பகுதிகளில் சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மும்பை - கோவா இடையேயான வந்தே பாரத் ரயில் குறித்து மத்திய ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொங்கன் ரயில்வே பகுதியின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பகுதி ஆகும். அங்கு ரயில்கள் மலைத்தொடர்கள் வழியாக செல்கின்றன. அது கடினமான பாதை. அங்கு வேகத்தை அதிகரித்தால் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்" என்கிறார்.

"மழைக்காலங்களில் அனைத்து ரயில்களுக்கும் அதிகபட்ச வேகத்தை 75 கிமீ அளவில் வைத்திரும்பபது மிகவும் சவாலானது" என்றும் அவர் சொல்கிறார்.

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த கான்ஸ்டபிளுக்கு வேலை! கேரண்டி கொடுத்த பாடகர் விஷால் தத்லானி!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ விண்ணப்பதாரர் சந்திரசேகர் கவுர் கூறுகையில், "ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தரவின்படி, 2020-21ல் வந்தே பாரத் ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 84.48 ஆக இருந்து, 2022-23ல் மணிக்கு 81.38 கிமீ வேகமாக குறைந்துள்ளது. 2023-24ல் இது மணிக்கு 76.25 கி.மீ. ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டுகிறார்.

பிப்ரவரி 15, 2019 அன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை செமி ஹைஸ்பீடு ரயிலாக இயக்கப்பட்டது. அதாவது அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது. ஆனால், டில்லி-ஆக்ரா வழித்தடத்தைத் தவிர, மற்ற இடங்களில் 130 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாத நிலை இருந்தது.

"டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இந்தியாவின் முதல் செமி-ஹைஸ்பீடு ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்குவதற்காக 2016ஆம் ஆண்டில் சில வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வழித்தடங்களில் மட்டும் வந்தே பாரத் 160 கிமீ வேகத்தில் இயங்குகிறது. மீதமுள்ள இடங்களில், அதன் அதிகபட்ச வேகம் 130 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது" என்று மற்றொரு ரயில்வே அதிகாரி சொல்கிறார்.

வந்தே பாரத் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்வே தண்டவாளங்களை மேம்படுத்தி வருவதாகவும், இந்தப் பணிகள் முடிந்ததும், 250 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

டேராடூன்-ஆனந்த் விஹார் (மணிக்கு 63.42 கி.மீ.), பாட்னா-ராஞ்சி (மணிக்கு 62.9 கி.மீ.) மற்றும் கோயம்புத்தூர்-பெங்களூரு கான்ட் (மணிக்கு 58.11 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலின் வேகம் ஒட்டுமொத்த சராசரி வேகத்தை விட மோசமாக உள்ளது.

"நாடு முழுவதும் மொத்தம் 284 மாவட்டங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 102 வந்தே பாரத் ரயில்கள் ரயில்வே நெட்வொர்க்கின் 100 வழித்தடங்களில் சேவைகளை வழங்குகின்றன. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும்" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios