UPSC Misusing Quotas | பூஜா கேத்கரின் IAS தேர்வின் வெற்றி ரத்து! இனி வரும் UPSC தேர்வுகளும் எழுதத்தடை!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் - (UPSC) இடஒதுக்கீடுகளைத் தவறாகப் பயன்படுத்தியது" மற்றும் "போலி அடையாளத்தைப் சமர்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வரும் UPSC தேர்வுகளையும் அவர் எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

UPSC Cancels Puja Khedkar's IAS Training for Misusing Quotas and Faking Identity dee

UPSC தேர்வுகள்

UPSC என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-323 பகுதி XIV அத்தியாயம் II-ன் கீழ் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பாகும். இந்த ஆணையம் மத்திய அரசின் சார்பில் பல தேர்வுகளை நடத்தி அதன் மூலம் IAS, இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை தேர்வுசெய்கிறது. மேலும், மத்திய சேவைகளான குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகியவற்றிற்கு நியமனம் செய்ய விண்ணப்பதாரர்களை பரிந்துரைக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி ஐஏஎஸ் ஆக பணியாற்றி வருப் பூஜா கேத்கர், இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாகவும், போலி அடையாளத்தை பயன்படுத்தி பணி வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் பூதாகாரம் ஆன நிலையில், யுபிஎஸ்சி ஆணையம் அவரது அனைத்து தகவல்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது.

அவ்விசாரணையில் பூஜாகேத்கர், ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக, ஊனமுற்றோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (கிரீமி லேயர் அல்லாத) ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தற்காலிக பணியை ரத்து செய்ததோடு, யுபிஎஸ்சி கமிஷன் நடத்தும் இனி வரும் தேர்வுகளிலும் அவர் பங்கேற்க நிரந்தரமாக தடை விதித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் முன்பே 'Manoj Soni' ராஜினாமா? அடுத்த UPSC தலைவர் யார்?

பூஜா கேத்கர் தொடர்பாக, யுபிஎஸ்சி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன் அடையாளத்தை போலியாகக் காட்டி" தேர்வு விதிகளில் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடி செய்ததற்காக பூஜா கேத்கருக்கு ஜூலை 18 அன்று (Show cause Notice) ஷோ காஸ் நோட்டீஸ் (SCN) வழங்கப்பட்டது. அந்த காலவரம்புக்குள் அவர் பதிலளிக்காததால் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் இது "இறுதி வாய்ப்பு" என்றும் இதன் பின்னர் கால நீட்டிப்பு அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.

UPSC புதிய தலைவராக முன்னாள் IAS ப்ரீத்தி சுதன் நியமனம்! நாளை பதவியேற்பு! யார் இந்த ப்ரீத்தி?

அவருக்கு அனுமதிக்கப்பட்ட கால நீட்டிப்பு இருந்தபோதிலும், பூஜா கேத்கர் தனது விளக்கத்தை பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்று யுபிஎஸ்சி குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios