எல்கேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங் உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்திர பிரதேசத்தில் உள்ள, மகாத்மா ஜோதிபா பல்கலை பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். 

அப்போது பேசிய அவர்,"அடுத்த  கல்வி ஆண்டு முதல் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில், ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை குறைப்பது குறித்தும், ஜிஎஸ்டி தொடர்பான படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் கொண்டு வர திட்டம் போடப்பட்டு உள்ளதாகவும் பேசி உள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி யால், இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.