Samadhi: Unnao: Sadhu: உயிருடன் சமாதியாக முயன்ற சாது: பூமிக்கு அடியில் இருந்து மீட்ட உ.பி. போலீஸார்: வீடியோ
உத்தரப்பிரதேசம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை எட்டப்போவதாகக் கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீஸார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர்.
உத்தரப்பிரதேசம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை எட்டப்போவதாகக் கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீஸார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், போலீஸாருக்கு இந்த சமாதி குறித்து தகவல் அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் மதரீதியான பழக்கத்தை ஒரு சாது செய்கிறார், இது தற்கொலை செய்வதற்கு சமம் என்று அந்த பத்திரிகையாளர் தெரிவித்தார்.
சிவசேனா கட்சி விவகாரம்… உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!
இதையடுத்து, அசிவான் போலீஸ் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் தேஜ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களும், தங்கள் கிராமத்துக்கு வெளியே சாதுக்கள் சிலர் சேர்ந்து பூஜை செய்து வருகிறார்கள், அதில் 22வயதான சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலைக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அசிவான் போலீஸார் குழுவாக தேஜ்பூர் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு வேறு பல சாதுக்களும் சேர்ந்து, 22வயதான சாதுவை குழிக்குள் இறக்கி, மண்ணைப் போட்டு மூடி யாகம் செய்து கொண்டிருந்தனர்.
மைசூர் பெண்ணின் காலில் விழுந்த இன்போசிஸ் தலைவர் சுதா மூர்த்தி.. இதுதான் காரணமா ? வைரல் போட்டோ.!
இதைப் பார்த்த போலீஸார் யாகத்தை தடுத்து நிறுத்தி, குழியைத் தோண்டி, குழிக்குள் படுத்திருந்த 22வயது சாதுவை உயிருடன் மீட்டனர்.
இதுகுறித்து அசிவான் போலீஸ் நிலைய அதிகாரி அனுராக் சிங் கூறுகையில் “ தேஜ்பூர் கிராமத்தைச் சிலரும், பத்திரிகையாளர் ஒருவரும், இளைஞர் ஒருவர் உயிருடன் சமாதியாக முயல்கிறார்.உடனே தடுத்து நிறுத்துங்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, தேஜ்பூர் கிராமத்துக்குச் சென்று, சாதுக்கள் பூஜை செய்த இடத்துக்கு சென்றோம். அங்கு குழிக்குள் இருந்த இளைஞரை உயிருடன் மீட்டோம். அவர் பெயர் சுபா எம் குமார்.
அந்த இடத்தில் இருந்த மற்ற சாதுக்களும், குமாரின் நண்பர்களுமான ராகுல் மற்ற இருவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கும், சுபவ் குமார் மீது தற்கொலைக்கு முயன்ற வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
செப்.29 அன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்... கூடலூரில் 2 நாள் பாதயாத்திரை!!
கடந்த 25ம் தேதி, உன்னவ் மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்தது. 55வயதான சாது ஒருவர் தனது கழுத்தில் கொடிய விஷப் பாம்பை சுற்றிக்கொண்டு கடவுள் சிவன் போல் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டார்.
ஆனால், திடீரென்று அந்த விஷப்பாம்பு அந்த சாதுவை கடித்தது. இதையடுத்து, அந்த சாதுவை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த சாது உயிர்பிழைத்தாலும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை. இந்த வீடியோவும்வைரலாகியது.