பாஜகவில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது.. சந்திரசேகர் ராவை அட்டாக் செய்த பாஜக அமைச்சர்!

வழக்கமாக ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், அவரை மாநில முதல்வர் வரவேற்பது மரபு ஆகும். ஆனால் பிரதமரை சந்திரசேகர ராவ் வரவேற்க செல்லாததால் பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Union Minister G Kishan Reddy alleges Telangana CM KCR indulged in digressed politics

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். ஆனால், முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. 

Union Minister G Kishan Reddy alleges Telangana CM KCR indulged in digressed politics

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?

வழக்கமாக ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், அவரை மாநில முதல்வர் வரவேற்பது மரபு ஆகும். ஆனால் பிரதமரை சந்திரசேகர ராவ் வரவேற்க செல்லாததால் பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமரை வரவேற்பு சந்திரசேகர் ராவ் செல்லாதது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல தவிர்த்து வந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த கூட்டத்தில் தென்இந்தியாவில் குறிப்பாக தெலஙகானாவில் பாஜகவின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

Union Minister G Kishan Reddy alleges Telangana CM KCR indulged in digressed politics

இந்நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ‘தெலங்கானா மாநிலத்தில் சீரழிந்த அரசியலில் மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஈடுபடுகிறார். தெலங்கானா ராஷ்டிர  சமிதி ஆட்சியை இழக்க நேரிடும் என பயப்படுகிறது. அதனால்தான் அவர்கள் எங்களுக்கு எதிராக விளம்பரம் செய்ய பொதுமக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

நாம் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி செய்யவில்லை. பாஜகவில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது, நம்மிடம் ஜனநாயகம் உள்ளது. ஒரு சாதரண தொண்டன் கூட முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவராகிறார். இது போன்ற ஊழல் கட்சிகளிடம் இருந்து நாம் பாடம் கற்க தேவையில்லை’ என்று கூறினார். இந்த பேட்டி பாஜக மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு இடையேயான பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios