பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் - ஜி20-யில் தடாலடியாக அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

UAE acknowledged pok as part of india in g20 video gan

ஜி20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியா தலைமையில் நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதில் ஒன்று தான் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான வழித்தடம் குறித்த அறிவிப்பு வீடியோவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் சைஃப் பின் சையத் இதுகுறித்த மாதிரி புகைப்படத்துடன் கூடிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்துக்கு ஆப்பு; இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஜி20-யின் மெகா திட்டம்!

அப்பகுதியின் மீது நீண்டகாலமாக உரிமை கோரி வரும் பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சர்வதேச நாடுகள் அங்கீகரித்து உள்ளதை இது உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடமானது வர்த்தகம், முதலீடு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒரு திட்டம் ஆகும். மேலும் இது பிராந்தியங்களுக்கு இடையேயான வலுவான உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார இணைப்பு வழித்தடத்தின் ஒரு முக்கிய அங்கமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம்பெற்றுள்ளதால், இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு ராஜதந்திர நகர்வைக் குறிக்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு: அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார் பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios