10:34 PM IST
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றி; மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
4:25 PM IST
Breaking: நாகாலாந்தில் நசுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி: ஒரு இடம் கூட இல்லை!
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி. விரிவான செய்திகளுக்கு ...
3:57 PM IST
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக வெற்றி; பிரதமருக்கு பாராட்டு!!
திரிபுராவில் பாஜக தனித்தும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (என்டிபிபி) தனித்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில், இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன
3:55 PM IST
Breaking: நாகாலாந்து முதல்வர் நெபியூ ராய் 5-வது முறையாக வெற்றி
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 36 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ 5வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளார். வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 15,824 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாகாலாந்து முதல்வர் நெபியு தொடர்ந்து 5-வது முறையாக வடக்க அங்காமி தொகுதியில் வென்றுள்ளார்.
3:39 PM IST
மேகாலயாவில் தொங்கு சட்டசபையா? கான்ராட் சங்மா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது விரிவான செய்திகளுக்கு...
2:01 PM IST
Breaking: நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ | யார் இந்த ஹெக்கானி ஜக்காலு?
நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக, பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திகளுக்கு..
1:30 PM IST
Breaking: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! திப்ரா மோத்தா கட்சிக்கு வலைவீசும் பாஜக
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது. விரிவான செய்திகளுக்கு..........
12:26 PM IST
Breaking: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பாஜக
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் நிலவரங்கள் தெரிவிக்கின்றன விரிவான செய்திகளுக்கு -------
12:18 PM IST
Breaking: திரிபுரா முதல்வர் மாணிக் சஹா வெற்றி
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில் தற்போது தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளது. திரிபுராவில் பாஜக 31 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மைக்கு சரியாக இருக்கிறது
இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இதில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, டவுன் பர்தோவலி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.தேர்தல் ஆணையம்இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் அங்குள்ள களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
பிஸ்ஹால்கார்க் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுஷாந்தா தேப், சிபிஎம் வேட்பாளர் பிரதா பிரதிம் மஜூம்தாரை தோற்கடித்துள்ளார்
12:09 PM IST
Breaking: மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியானது கான்ராட் சங்மாவின் என்பிபி
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணியை ஆட்சி அமையும். அந்த கூட்டணியை கான்ராட் சங்கமா முடிவு செய்யும் நிலையில் உள்ளார்.
முதல்வர் கான்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளர் மாரக்கைவிட 44 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
சுத்கா சாய்பங் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் ஹெச் பாலா, என்பிபி வேட்பாளர் சாந்தா மேரி ஷைலாவிட 1,257 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா, சான்சக் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார், திக்ரிகிலா தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரி பின்தங்கியுள்ளார். யுபிடி கட்சி வேட்பாளர் பால் லிங்டோ 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
11:59 AM IST
Breaking: கொண்டாட்டத்துக்கு தயாராகும் மேகலாயா முதல்வர் இல்லம்
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
இதனால் மேகாலயாவில் கான்ராட் சங்கமா கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, துரா நகரில் உள்ள கான்ராட் சங்மா இல்லத்தில் இனிப்புகள் செய்யும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது இனிப்புகளை வழங்குவதற்காக சமையல்கலைஞர்கள் இனிப்புகளை செய்யும் மும்முரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேகலாயாவில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. இதில் கான்ராட் சங்மா கட்சி என்பிபி 25 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், இதர கட்சிகளுடன் கூட்டணி சேரவும் கான்ராட் சங்மா தயங்கமாட்டார் என்பது அவரின் சமீபத்திய பேச்சில் சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.
11:50 AM IST
Breaking: நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ முன்னிலை
Nagaland Election Results 2023: நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 35 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 6,394 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்
துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான ஒய் பட்டான் 110 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்துவருகிறார்.
11:37 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் ‘கிங் மேக்கராக’ வரும் திப்ரா மோத்தா கட்சி
Tripura Assembly Election Result 2023 : திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் ஒவ்வொரு சுற்றிலும் எழுகிறது. பாஜகாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு, 16 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஆளும் கட்சியான பாஜக தற்போது 32 இடங்களில் முன்னிலையுடன் செல்கிறது. ஆனால், சிறிது நேரத்துக்கு முன் பெரும்பான்மைக்கு வழியில்லாமல் பின்தங்கியது
ஆனால், 2019ம் ஆண்டு கட்சி தொடங்கி, அசுரவளர்ச்சியில் உள்ள திப்ரா மோத்தா கட்சி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக்கு கடும் சவாலாக இருக்கிறது. திரிபுராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் கிங் மேக்கராக திப்ரா மோத்தா கட்சி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரத்யோத் கிஷோர் மணிக்யா தீபர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி, அடுத்த மாநிலத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். 20 ரிசர்வ் தொகுதியில் திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வாக்குகளைப் பெறமுடியாமல் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் திணறி வருகிறார்கள், அவர்களின் வாக்குகளை எல்லாம் திப்ரா மோத்தா அறுவடை செய்துவருகிறது.
கிரேட்டர் திரிபுரா உருவாக்க வேண்டும், பழங்குடியினருக்கு தனிமாவட்டம்,பகுதி கேட்டு தொடங்கப்பட்ட திப்ரமா மோத்தா கட்சியின் நோக்கம் நிறைவேறுமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப்பின் தெரியும்
11:22 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் பாஜக மாநிலத் தலைவருக்கு வந்த சோதனை!
Meghalaya Assembly election result 2023 மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. 2வது இடத்தைப் பிடிக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மாநில பாஜக தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரீ பின்னடைந்துள்ளா். மேற்கு ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட மாவ்ரீ ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் பால் லிங்கோடவை விட 6ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். என்பிபி வேட்பாளர் 2,920 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் நான் சார்ந்திருக்கும் பாஜக கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியது மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பி அரசியல் செய்துவரும் பாஜக மேகாலயாவில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பவில்லை. அங்குவாழும் மக்களுக்கு மாட்டிறைச்சி முக்கியமான உணவு என்பதால், அங்கு இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் எழுப்பப்படவில்லை.
11:15 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் பாஜக நிலை!…கரணம் தப்பினால் மரணம்!
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற கேள்வியுடன் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு சுற்றுகள் எண்ணப்பட்டு முடிக்கும்போதும் பாஜக ஒவ்வொரு படியாக இறங்குகிறது. தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சிஅமைக்கலாம் என்ற பாஜகவின் கனவில் மண்விழும்வகையில் திப்ரா மோத்தா கட்சி அடித்து நொறுக்குகிறது.
இதனால் 30 இடங்களுக்கு மேல் பாஜகமுன்னிலையுடன் இருந்தநிலையில், சரியாக 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது எந்தநேரத்திலும் மாறுபடலாம் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் பாஜக நிலை இருக்கிறது.
பாஜகவை ஒழிக்க ஒன்று சேர்ந்த இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளனர். திப்ரோ மோத்தா 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
இடதுசாரி, காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் சவாலாக திப்ரா மோத்தா இந்த தேர்தலில் முளைத்திருக்கிறது. இந்த 3 கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கவும், பல இடங்களில் தோல்வி அடையவும் திப்ரா மோத்தா காரணமாக அமைந்துள்ளது.
11:05 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் கான்ராட் சங்மா, முகுல் சங்மா முன்னிலை
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் நிலவி வருகிறது.
தனிப்பெரும் கட்சியாக என்பிபி கட்சி வரலாம், ஆனால், தனிப்பெரும்கட்சியாக ஆட்சியமைக்க முடியாது. ஆதலால் மேகாலயாவில் கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்புள்ளது. என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா, மீண்டும் பாஜகவின் பக்கம் செல்வாரா அல்லது வேறு வாய்ப்பை நாடுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதில் முதல்வர் கான்ராட் கே சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியி்ட்டார். பாஜக வேட்பாளர் பெர்னார்ட் மாரக்கைவிட 44 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையுடன் சங்மா நகர்கிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வரான முகுல் சங்மா, சாங்சக் தொகுதியில் முந்துகிறார், ஆனால், திக்ரிகில்லா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
10:58 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் திப்ரா மோத்தா
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலைபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் முன்னிலையுடன் நகர்ந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய நிலையில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி முதல் தேர்தலிலேயே வெளுத்து வாங்குகிறது. 12 இடங்களி்ல் முன்னிலை பெற்று, இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி சவாலாக இருக்கிறது. திரிபுரா துணை முதல்வர் ஜிஷு தேவ் வர்மா 1000 வாக்குகள் , திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுபோத் தேவ் வர்மாவிடம் பின்தங்கியுள்ளார். திரிபுராவில் பல இடங்களில் பாஜகவுக்கு சவால் விடுத்து, அந்தக் கட்சி வெல்ல வேண்டிய இடங்களில் திப்ரா மோத்தா கட்சி வாக்குகளை பிரித்துள்ளது.
10:49 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் நம்பர் 2 இடத்துக்கு 3 கட்சிகள் போட்டி!
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் நம்பர் 2 இடத்துக்கு 3 கட்சிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 23 இடங்களில் முன்னிலையுடன் தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது.
ஆனால், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகள் ஒருவொருக்கொருவர் கடும் போட்டியாக இருக்கின்றன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அந்தக் கட்சியை இறக்கிவிட்டு, பாஜக முன்னிலை சென்றது. இப்போது இரு கட்சிகளையும்பின்னுக்குத் தள்ளி ஐக்கிய ஜனநாயக முன்னணி 8 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக, திரிணமூல் காங்கிரஸ் தலா 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
10:34 AM IST
Election Results 2023: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள்
10:29 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் பாஜகவுக்கு பின்னடைவு! ரேஸில் யுடிபி முந்துகிறது
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகலாயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது
நம்பர் -2 இடத்தைப் பிடிக்க மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி தொடக்கத்தில் இருந்து நிலவி வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்று வந்தனர். இந்நிலையில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலையும், இணையாக, ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உள்ன. ஆனால், பாஜக 7 இடங்களில் பின்தங்குகிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையுடன் உள்ளது. மற்ற கட்சிகள் 10 இடங்களில் உள்ளனர். மேகாலயாவில் கான்ராட் சங்கமா, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிஅமைப்பதற்கு கூட பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
10:22 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் சரியும் பாஜக செல்வாக்கு! இடதுசாரி,காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோத்தா கடும் சவால்
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திரிபுராவில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலைபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய நிலையில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. தொடக்கத்தில்பாஜக 30 இடங்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது. இப்போது, 29 இடங்களாகக் குறைந்துவிட்டது. ஆனால், பொருந்தாக் கூட்டணி என்று கூறப்பட்ட இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி தொடக்கத்தில் மந்தமாக இருந்து தற்போது 19 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்கள். திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களுடன் வலுவான போட்டியளிக்கிறது. திரிபுராவில் பாஜகவின் செல்வாக்கு அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் சரிந்து வருகிறது.
10:14 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நம்பர்-2 இடம் யாருக்கு? மம்தா கட்சி-பாஜக கடும் மோதல்
மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேகாலயாவில்தான் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்கட்சியாகவே என்பிபி இருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு வரவில்லை.
இது ஒருபக்கம் இருக்க, பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிகும் நம்பர்-2 இடத்துக்கு கடும் போட்டிபோடுகின்றன. மேகாலயாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் இரு கட்சிகளும் மாறி,மாறி முன்னிலையுடன் நகர்கின்றன. பாஜக, திரிணமூல் ஆகிய கட்சிகள் தலா 8 இடங்களில் முன்னிலையுடன் நகர்கின்றன.
இதே நிலை தொடர்ந்தால் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் நிலவும். அதன்பின் வழக்கம்போல் அரசியல் களத்தில் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்புள்ளது.
10:03 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் தள்ளாடும் பாஜக! ஆட்சியைத் தக்கவைக்குமா?
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிபுராவில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை அகற்றிவிட்டு கடந்த முறை பாஜக36 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் வாக்கு வங்கியை காலி செய்யும் முனைப்பில் திப்ரா மோத்தா கட்சி களமிறங்கி வாக்குகளை வென்று வருகிறது.
கடந்த தேர்தலில் 36 இடங்களில் வென்ற பாஜக தற்போது 30 இடங்களில் மட்டுமே முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் முன்னணியில் இருந்த பாஜக கூட்டணி பின்தங்குகிறது. ஆனால், எதிரும்புதிருமாக இருந்த காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா 12 இடங்களில் முன்னிலையுடன் கடும் சவால் அளித்து வருகிறது.
இதே நிலை இன்னும் சிலமணிநேரங்கள் நீடித்தால், பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் எனத் தெரிகிறது
9:58 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் டஃப் கொடுக்கும் திப்ரா மோத்தா கட்சி
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி முதல்முறையாகத் தேர்தலைச்சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு கடும் போட்டியாக திப்ரா மோத்தா கட்சி வளர்ந்துள்ளது.
பாஜக தனிப்பெரும்பான்மையாக 32 இடங்களில் இருந்தாலும், அது நிலையானதா எனத் தெரியவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்லச் செல்ல திப்ரா மோத்தா கட்சி முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 3 இடங்களில் முன்னிலையில்இருந்த திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் தனியாக கிரேட்டர் திரிபுரா என்ற மாவட்டம்தேவை, பழங்குடியினருக்கான தனி இடம் தேவை என்ற கோரிக்கையுடன் திப்ரா மோத்தா கட்சி தொடங்கப்பட்டு வாக்குகளைப் பெற்று வருகிறது.
9:48 AM IST
மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்கமா பின்னடைவு
மேகாலயாவில் திக்ரிகில்லா சட்டசபை தொகுதியில் என்பிபிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்பிபி வேட்பாளர் ஜிம்மி சங்மா 140 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரான ரஹிநாத் பர்சுங், என்பிபி வேட்பாளருக்கு கடும் போட்டியை அளித்து வருகிறார். பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்கமா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
9:45 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் என்பிபி கட்சி பெரும்பான்மையுடன் முன்னிலை?
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேகாலயாவில்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுயது. ஏனென்றால் தனிப்பெரும்கட்சியாகத்தான் வரமுடியுமேத் தவிர தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்ற சூழல் நிலவியது. இந்நிலையில் கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 31 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் செல்வதாக செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க என்டிபிபி முயன்றால், இரு கட்சிகளுக்கும் சேர்த்து 40 இடங்களுக்கும் மேல் பெறும். எளிதாக ஆட்சி அமைக்க முடியும். பாஜக தற்போது 10 இடங்களி்ல் முன்னிலையுடன் நகர்கிற
9:44 AM IST
Nagaland Election Results 2023: நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி!!
நாகாலாந்தில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற உள்ளது, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருப்பதால், துவக்க நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது. இதன்படி, பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (NDPP) மொத்தமுள்ள 60 இடங்களில் 49 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சி அமைக்க 31 வெற்றி பெற்று இருந்தால் போதும்.
9:40 AM IST
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வழிபாடு
திரிபுரா தேர்தலில் பாஜக கூட்டணி வலிமையான முன்னிலை பெற்றுவரும் சூழலில் முதல்வர் மாணிக் சாஹா மாதா திரிபுர சுந்தரி ஆலயத்தில் வழிபாடு.
Took blessings of Mata Tripura Sundari before the announcement of assembly poll results. pic.twitter.com/9qKwtpn5UP
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) March 2, 2023
9:37 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் திப்ரா மோத்தா கட்சி அபாரம்
Tripura Assembly Election Result 2023:திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதிதல் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை திப்ரா மோத்தா கட்சி 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திரிபுராவில் தனியாக கிரேட்டர் திரிபுரா என்ற மாவட்டம்தேவை, பழங்குடியினருக்கான தனி இடம் தேவை என்ற கோரிக்கையுடன் திப்ரா மோத்தா கட்சி தொடங்கப்பட்டு வாக்குகளைப் பெற்று வருகிறது.
9:31 AM IST
மேகாலயாவில் திரிணாமுல் வேட்பாளர் சேரக் வாட்ரே மோமின் முன்னிலை
மேகாலயாவின் கார்குட்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சேரக் வாட்ரே மோமின் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரூபர்ட் மோமின் 279 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
9:28 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய மம்தா கட்சி
மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் தனிப்பெரும்கட்சியாகத்தான் வரமுடியுமேத் தவிர தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது.
அந்தவகையில் பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வாக்கு எண்ணிக்கையும் தலா 10 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக பின்னடைந்து 9 இடங்களாகக் குறைந்தது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
9:24 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா முன்னிலை
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் நகர்ந்து வருகிறது. முதல்வர் மாணிக் சாஹா பர்தோவாலி தொகுதியில்போட்டியிட்டநிலையில் அவரும் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்.
9:19 AM IST
Meghalaya Election Results 2023: மேகாலயாவில் திரிணாமுல் வேட்பாளர் ராஜேஷ் மராக் முன்னிலை
Meghalaya Election Results 2023: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ராஜேஷ் மராக் ரொங்காரா சிஜு சட்டமன்றத் தொகுதியில் 155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரக்கம் ஏ சங்மா பின்தங்கியுள்ளார்.
9:17 AM IST
Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் எடுபடாத காங்கிரஸ்-மார்க்சிஸ்ட்கூட்டணி
Tripura Assembly Election Result 2023:திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் நகர்ந்து வருகிறது. பாஜக வீழ்த்தும் நோக்கில் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டபோது, எதிர்க்கட்சி சிம்மாசனத்தை காங்கிரஸ் கட்சி அலங்கரித்தது. திரிபுராவில் எதிர்துருவங்களாக இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியை பொருந்தாக் கூட்டணியாக மக்கள் நினைத்துவிட்டார்கள். பாஜகவீழ்த்த சேர்ந்த இரு கட்சிகளும், வெறும் 15 இடங்களில் மட்டுமே முன்னிலையுடன் நகர்கிறார்கள். இரு கட்சிகளின் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை, நம்பவும் இல்லை.
9:13 AM IST
Meghalaya Election Results 2023: மேகலாயாவில் ஆளும் கட்சி முன்னிலை
Meghalaya Election Results 2023: மேகாலயா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் இதுவரை என்பிபி கட்சி 21இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். என்பிபி கட்சி இங்கு ஆளும் கட்சியாக இருக்கிறது. மீண்டும் கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
9:08 AM IST
நாகாலாந்தில் துடைத்து எறியப்படும் காங்கிரஸ்
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாகாலாந்தில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மக்களால் துடைத்து எறியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது. இந்தத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுவருகிறது. இந்த முன்னிலையும் சாத்தியமில்லாதபட்சத்தில் மக்களால் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும்
9:05 AM IST
Nagaland Election Results 2023: நாகாலாந்தில் பாஜக முன்னிலை
Nagaland Election Results 2023: நாகாலாந்து மாநிலத்தில் என்டிபிபி கட்சி 30 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், என்பிஎப் 2 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
9:03 AM IST
Nagaland Assembly election result 2023: நாகாலாந்தில் மொத்தமாக அள்ளும் பாஜக கூட்டணி
Nagaland Assembly election result 2023:நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க பெரும்மான்மையாக 31 இடங்கள் தேவை. ஆனால், பாஜக, என்டிபிபி கூட்டணி அதைவிட அதிகமாக 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. நாகாலந்தின் ஆளும் என்பிஎப் கூட்டணி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
9:02 AM IST
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா முன்னிலை
டவுன் போர்டோவாலி தொகுதியில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா முன்னிலை வகிக்கிறார்
8:59 AM IST
திரிபுராவில் பாஜக அலுவலகத்தில் பூஜை
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் பூஜை செய்தனர். அப்போது திரிபுராவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
8:54 AM IST
மேகாலயாவில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்வாரா கான்ராட் சங்மா
மேகாலயாவில் நடந்த தேர்தலில் 60 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திரிபுரா, நாகாலாந்தில்பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்பது தெரியவந்துள்ளநிலையில் மேகாலயாவில் கடும் இழுபறி நீடிக்கிறது.
இதில் மேகாலாயவில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு கடும் போட்டியாக மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நகர்ந்து வருகிறது. இதனால் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைகிடைக்காத சூழல் உருவாகலாம். அவ்வாறு ஏற்படும்பட்சத்தில் பாஜகவுடன், கான்ராட் சங்மா மீண்டும் கூட்டணி சேர்வார் எனத் தெரிகிறது.
8:50 AM IST
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் பாஜகவுக்கு சவால்விடும் மம்தா பானர்ஜி கட்சி
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு இணையாக, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டிபோடுகிறது. இரு கட்சிகளும் தலா 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். யுடிபி கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
8:46 AM IST
திரிபுராவிலும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை
திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் பாஜக கூட்டணி 38 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று நகர்ந்து வருகிறது. இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
8:46 AM IST
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை
தேசிய மக்கள் கட்சி - 19
திரிணாமுல் - 9
பாஜக - 7
காங்கிரஸ் 7
8:44 AM IST
நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் முன்னிலை
நாகாலாந்தில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாஜக, என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை எனும்பட்சத்தில் 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது பாஜக, என்டிபிபி கூட்டணி
8:35 AM IST
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கிறது
திரிபுராவில் நடந்த 60 தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக கூட்டணி 32 இடங்களில் முன்னிலைபெற்று, ஆட்சியைத் தக்கவைக்கிறது. நாகாலாந்தில் நடந்த தேர்தல் பாஜக என்டிபிபி கூட்டணி 36 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கிறது.
8:29 AM IST
திரிபுராவில் காங்கிரஸ்-இடதுசாரியை ஏற்காத மக்கள்?
திரிபுராவில் நடந்த 60 தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் எதிரும்புதிருமாக இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச்சந்தித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் விபரீதமாக வெளியாகின்றன. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இந்த கூட்டணி 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலைபெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது.
8:26 AM IST
நாகாலாந்தில் பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் பாஜக கூட்டணி
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக,என்டிபிபி கூட்டணி 29 இடங்களில் முன்னிலை பெற்று நகர்ந்து வருகின்றன. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 29 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையுடன் நகர்கிறது
8:24 AM IST
மேகாலயாவில் கான்ராட் சங்மா கட்சி முன்னிலை
நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், என்பிஎப் கட்சி 6 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கின்றன
8:21 AM IST
நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி 16 இடங்களில் முன்னிலை
நாகாலாந்தில் நடந்த60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக, என்டிபிபி கூட்டணி 16 இடங்களில்முன்னிலை பெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்தக் கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது.
8:19 AM IST
மேகாலயாவில் ஆளும்கட்சி முன்னிலை!!
மேகாலயா மாநிலத்தில் பாஜக 2 இடத்திலும், திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆளும் என்பிபி ஏழு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
8:18 AM IST
திரிபுராவில் பாஜக 14 இடங்களில் முன்னிலை
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை காங்கிரஸுடன் கைகோர்த்து இடதுசாரிகள் களம் கண்டனர். ஆனாலும், இந்தத் தேர்தலிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களுக்கு மேல் வெல்லாது எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் திரிபுராவில் பாஜக 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 6இடங்களில் முன்னணியில் உள்ளன.
8:14 AM IST
திரிபுராவில் பாஜக முன்னிலை!!
திரிபுரா மாநிலத்தில் பாஜக 28 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
8:13 AM IST
நாகாலாந்தில் பாஜக முன்னிலை!!
நாகாலாந்து மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 6 இடங்களில் முன்னணியில் உள்ளது.
8:04 AM IST
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது
திரிபுராவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தேர்தல் நடந்தது. மேகலாயா மற்றும் நாகாலாந்தில் உள்ள தலா 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்தபின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இன்று 3 மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸார், துணை ராணுவப்படையுடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
7:55 AM IST
வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை
பழங்குடியினரின் மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களை யார் கைப்பற்ற போகிறார் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. கருத்துக்கணிப்பில் மூன்றில், இரண்டு மாநிலங்களில் பாஜக முந்துகிறது. மேலும் படிக்க
7:38 AM IST
நாகாலாந்து தேர்தல் எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் முழுமையான விவரம்
நாகாலாந்து மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 184 வேட்பாளர்கள் களத்தில் மோதினர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மேலும் படிக்க
7:21 AM IST
மேகாலயா தேர்தல் எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் முழுமையான விவரம்
மேகாலயா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 375 வேட்பாளர்கள் களத்தில் மோதினர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மேலும் படிக்க
7:09 AM IST
திரிபுரா தேர்தல் எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் முழுமையான விவரம்
திரிபுரா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. இதில் 28.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் மோதினர். இங்கு பிப்ரவரி 16ஆம் தேதியே வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. அதில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் படிக்க
10:34 PM IST:
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
4:25 PM IST:
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி. விரிவான செய்திகளுக்கு ...
3:57 PM IST:
திரிபுராவில் பாஜக தனித்தும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (என்டிபிபி) தனித்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில், இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன
3:55 PM IST:
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 36 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ 5வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளார். வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 15,824 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாகாலாந்து முதல்வர் நெபியு தொடர்ந்து 5-வது முறையாக வடக்க அங்காமி தொகுதியில் வென்றுள்ளார்.
3:39 PM IST:
மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது விரிவான செய்திகளுக்கு...
2:01 PM IST:
நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக, பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திகளுக்கு..
1:30 PM IST:
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது. விரிவான செய்திகளுக்கு..........
1:09 PM IST:
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் நிலவரங்கள் தெரிவிக்கின்றன விரிவான செய்திகளுக்கு -------
12:18 PM IST:
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில் தற்போது தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளது. திரிபுராவில் பாஜக 31 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மைக்கு சரியாக இருக்கிறது
இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இதில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, டவுன் பர்தோவலி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.தேர்தல் ஆணையம்இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் அங்குள்ள களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
பிஸ்ஹால்கார்க் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுஷாந்தா தேப், சிபிஎம் வேட்பாளர் பிரதா பிரதிம் மஜூம்தாரை தோற்கடித்துள்ளார்
12:09 PM IST:
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணியை ஆட்சி அமையும். அந்த கூட்டணியை கான்ராட் சங்கமா முடிவு செய்யும் நிலையில் உள்ளார்.
முதல்வர் கான்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளர் மாரக்கைவிட 44 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
சுத்கா சாய்பங் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் ஹெச் பாலா, என்பிபி வேட்பாளர் சாந்தா மேரி ஷைலாவிட 1,257 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா, சான்சக் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார், திக்ரிகிலா தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரி பின்தங்கியுள்ளார். யுபிடி கட்சி வேட்பாளர் பால் லிங்டோ 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
11:59 AM IST:
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
இதனால் மேகாலயாவில் கான்ராட் சங்கமா கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, துரா நகரில் உள்ள கான்ராட் சங்மா இல்லத்தில் இனிப்புகள் செய்யும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது இனிப்புகளை வழங்குவதற்காக சமையல்கலைஞர்கள் இனிப்புகளை செய்யும் மும்முரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேகலாயாவில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. இதில் கான்ராட் சங்மா கட்சி என்பிபி 25 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், இதர கட்சிகளுடன் கூட்டணி சேரவும் கான்ராட் சங்மா தயங்கமாட்டார் என்பது அவரின் சமீபத்திய பேச்சில் சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.
11:50 AM IST:
Nagaland Election Results 2023: நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 35 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 6,394 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்
துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான ஒய் பட்டான் 110 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்துவருகிறார்.
11:37 AM IST:
Tripura Assembly Election Result 2023 : திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் ஒவ்வொரு சுற்றிலும் எழுகிறது. பாஜகாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு, 16 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஆளும் கட்சியான பாஜக தற்போது 32 இடங்களில் முன்னிலையுடன் செல்கிறது. ஆனால், சிறிது நேரத்துக்கு முன் பெரும்பான்மைக்கு வழியில்லாமல் பின்தங்கியது
ஆனால், 2019ம் ஆண்டு கட்சி தொடங்கி, அசுரவளர்ச்சியில் உள்ள திப்ரா மோத்தா கட்சி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக்கு கடும் சவாலாக இருக்கிறது. திரிபுராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் கிங் மேக்கராக திப்ரா மோத்தா கட்சி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரத்யோத் கிஷோர் மணிக்யா தீபர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி, அடுத்த மாநிலத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். 20 ரிசர்வ் தொகுதியில் திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வாக்குகளைப் பெறமுடியாமல் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் திணறி வருகிறார்கள், அவர்களின் வாக்குகளை எல்லாம் திப்ரா மோத்தா அறுவடை செய்துவருகிறது.
கிரேட்டர் திரிபுரா உருவாக்க வேண்டும், பழங்குடியினருக்கு தனிமாவட்டம்,பகுதி கேட்டு தொடங்கப்பட்ட திப்ரமா மோத்தா கட்சியின் நோக்கம் நிறைவேறுமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப்பின் தெரியும்
11:22 AM IST:
Meghalaya Assembly election result 2023 மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. 2வது இடத்தைப் பிடிக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மாநில பாஜக தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரீ பின்னடைந்துள்ளா். மேற்கு ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட மாவ்ரீ ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் பால் லிங்கோடவை விட 6ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். என்பிபி வேட்பாளர் 2,920 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் நான் சார்ந்திருக்கும் பாஜக கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியது மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பி அரசியல் செய்துவரும் பாஜக மேகாலயாவில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பவில்லை. அங்குவாழும் மக்களுக்கு மாட்டிறைச்சி முக்கியமான உணவு என்பதால், அங்கு இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் எழுப்பப்படவில்லை.
11:15 AM IST:
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற கேள்வியுடன் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு சுற்றுகள் எண்ணப்பட்டு முடிக்கும்போதும் பாஜக ஒவ்வொரு படியாக இறங்குகிறது. தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சிஅமைக்கலாம் என்ற பாஜகவின் கனவில் மண்விழும்வகையில் திப்ரா மோத்தா கட்சி அடித்து நொறுக்குகிறது.
இதனால் 30 இடங்களுக்கு மேல் பாஜகமுன்னிலையுடன் இருந்தநிலையில், சரியாக 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது எந்தநேரத்திலும் மாறுபடலாம் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் பாஜக நிலை இருக்கிறது.
பாஜகவை ஒழிக்க ஒன்று சேர்ந்த இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளனர். திப்ரோ மோத்தா 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
இடதுசாரி, காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் சவாலாக திப்ரா மோத்தா இந்த தேர்தலில் முளைத்திருக்கிறது. இந்த 3 கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கவும், பல இடங்களில் தோல்வி அடையவும் திப்ரா மோத்தா காரணமாக அமைந்துள்ளது.
11:39 AM IST:
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் நிலவி வருகிறது.
தனிப்பெரும் கட்சியாக என்பிபி கட்சி வரலாம், ஆனால், தனிப்பெரும்கட்சியாக ஆட்சியமைக்க முடியாது. ஆதலால் மேகாலயாவில் கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்புள்ளது. என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா, மீண்டும் பாஜகவின் பக்கம் செல்வாரா அல்லது வேறு வாய்ப்பை நாடுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதில் முதல்வர் கான்ராட் கே சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியி்ட்டார். பாஜக வேட்பாளர் பெர்னார்ட் மாரக்கைவிட 44 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையுடன் சங்மா நகர்கிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வரான முகுல் சங்மா, சாங்சக் தொகுதியில் முந்துகிறார், ஆனால், திக்ரிகில்லா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
10:58 AM IST:
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலைபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் முன்னிலையுடன் நகர்ந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய நிலையில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி முதல் தேர்தலிலேயே வெளுத்து வாங்குகிறது. 12 இடங்களி்ல் முன்னிலை பெற்று, இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி சவாலாக இருக்கிறது. திரிபுரா துணை முதல்வர் ஜிஷு தேவ் வர்மா 1000 வாக்குகள் , திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுபோத் தேவ் வர்மாவிடம் பின்தங்கியுள்ளார். திரிபுராவில் பல இடங்களில் பாஜகவுக்கு சவால் விடுத்து, அந்தக் கட்சி வெல்ல வேண்டிய இடங்களில் திப்ரா மோத்தா கட்சி வாக்குகளை பிரித்துள்ளது.
10:49 AM IST:
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் நம்பர் 2 இடத்துக்கு 3 கட்சிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 23 இடங்களில் முன்னிலையுடன் தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது.
ஆனால், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகள் ஒருவொருக்கொருவர் கடும் போட்டியாக இருக்கின்றன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அந்தக் கட்சியை இறக்கிவிட்டு, பாஜக முன்னிலை சென்றது. இப்போது இரு கட்சிகளையும்பின்னுக்குத் தள்ளி ஐக்கிய ஜனநாயக முன்னணி 8 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக, திரிணமூல் காங்கிரஸ் தலா 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
10:34 AM IST:
மேலும் படிக்க: Election Results 2023: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்
10:29 AM IST:
Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகலாயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது
நம்பர் -2 இடத்தைப் பிடிக்க மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி தொடக்கத்தில் இருந்து நிலவி வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்று வந்தனர். இந்நிலையில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலையும், இணையாக, ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உள்ன. ஆனால், பாஜக 7 இடங்களில் பின்தங்குகிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையுடன் உள்ளது. மற்ற கட்சிகள் 10 இடங்களில் உள்ளனர். மேகாலயாவில் கான்ராட் சங்கமா, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிஅமைப்பதற்கு கூட பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
10:22 AM IST:
Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திரிபுராவில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலைபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய நிலையில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. தொடக்கத்தில்பாஜக 30 இடங்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது. இப்போது, 29 இடங்களாகக் குறைந்துவிட்டது. ஆனால், பொருந்தாக் கூட்டணி என்று கூறப்பட்ட இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி தொடக்கத்தில் மந்தமாக இருந்து தற்போது 19 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்கள். திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களுடன் வலுவான போட்டியளிக்கிறது. திரிபுராவில் பாஜகவின் செல்வாக்கு அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் சரிந்து வருகிறது.
10:14 AM IST:
மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேகாலயாவில்தான் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்கட்சியாகவே என்பிபி இருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு வரவில்லை.
இது ஒருபக்கம் இருக்க, பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிகும் நம்பர்-2 இடத்துக்கு கடும் போட்டிபோடுகின்றன. மேகாலயாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் இரு கட்சிகளும் மாறி,மாறி முன்னிலையுடன் நகர்கின்றன. பாஜக, திரிணமூல் ஆகிய கட்சிகள் தலா 8 இடங்களில் முன்னிலையுடன் நகர்கின்றன.
இதே நிலை தொடர்ந்தால் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் நிலவும். அதன்பின் வழக்கம்போல் அரசியல் களத்தில் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்புள்ளது.
10:03 AM IST:
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிபுராவில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை அகற்றிவிட்டு கடந்த முறை பாஜக36 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் வாக்கு வங்கியை காலி செய்யும் முனைப்பில் திப்ரா மோத்தா கட்சி களமிறங்கி வாக்குகளை வென்று வருகிறது.
கடந்த தேர்தலில் 36 இடங்களில் வென்ற பாஜக தற்போது 30 இடங்களில் மட்டுமே முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் முன்னணியில் இருந்த பாஜக கூட்டணி பின்தங்குகிறது. ஆனால், எதிரும்புதிருமாக இருந்த காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா 12 இடங்களில் முன்னிலையுடன் கடும் சவால் அளித்து வருகிறது.
இதே நிலை இன்னும் சிலமணிநேரங்கள் நீடித்தால், பாஜக ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் எனத் தெரிகிறது
9:58 AM IST:
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி முதல்முறையாகத் தேர்தலைச்சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் ஆண்ட கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு கடும் போட்டியாக திப்ரா மோத்தா கட்சி வளர்ந்துள்ளது.
பாஜக தனிப்பெரும்பான்மையாக 32 இடங்களில் இருந்தாலும், அது நிலையானதா எனத் தெரியவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்லச் செல்ல திப்ரா மோத்தா கட்சி முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 3 இடங்களில் முன்னிலையில்இருந்த திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் தனியாக கிரேட்டர் திரிபுரா என்ற மாவட்டம்தேவை, பழங்குடியினருக்கான தனி இடம் தேவை என்ற கோரிக்கையுடன் திப்ரா மோத்தா கட்சி தொடங்கப்பட்டு வாக்குகளைப் பெற்று வருகிறது.
9:48 AM IST:
மேகாலயாவில் திக்ரிகில்லா சட்டசபை தொகுதியில் என்பிபிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. என்பிபி வேட்பாளர் ஜிம்மி சங்மா 140 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரான ரஹிநாத் பர்சுங், என்பிபி வேட்பாளருக்கு கடும் போட்டியை அளித்து வருகிறார். பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்கமா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
9:50 AM IST:
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேகாலயாவில்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுயது. ஏனென்றால் தனிப்பெரும்கட்சியாகத்தான் வரமுடியுமேத் தவிர தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்ற சூழல் நிலவியது. இந்நிலையில் கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 31 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் செல்வதாக செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க என்டிபிபி முயன்றால், இரு கட்சிகளுக்கும் சேர்த்து 40 இடங்களுக்கும் மேல் பெறும். எளிதாக ஆட்சி அமைக்க முடியும். பாஜக தற்போது 10 இடங்களி்ல் முன்னிலையுடன் நகர்கிற
9:44 AM IST:
நாகாலாந்தில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற உள்ளது, பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருப்பதால், துவக்க நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது. இதன்படி, பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (NDPP) மொத்தமுள்ள 60 இடங்களில் 49 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சி அமைக்க 31 வெற்றி பெற்று இருந்தால் போதும்.
9:40 AM IST:
திரிபுரா தேர்தலில் பாஜக கூட்டணி வலிமையான முன்னிலை பெற்றுவரும் சூழலில் முதல்வர் மாணிக் சாஹா மாதா திரிபுர சுந்தரி ஆலயத்தில் வழிபாடு.
Took blessings of Mata Tripura Sundari before the announcement of assembly poll results. pic.twitter.com/9qKwtpn5UP
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) March 2, 2023
9:38 AM IST:
Tripura Assembly Election Result 2023:திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதிதல் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை திப்ரா மோத்தா கட்சி 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திரிபுராவில் தனியாக கிரேட்டர் திரிபுரா என்ற மாவட்டம்தேவை, பழங்குடியினருக்கான தனி இடம் தேவை என்ற கோரிக்கையுடன் திப்ரா மோத்தா கட்சி தொடங்கப்பட்டு வாக்குகளைப் பெற்று வருகிறது.
9:31 AM IST:
மேகாலயாவின் கார்குட்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சேரக் வாட்ரே மோமின் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரூபர்ட் மோமின் 279 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
9:29 AM IST:
மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனென்றால் தனிப்பெரும்கட்சியாகத்தான் வரமுடியுமேத் தவிர தனிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது.
அந்தவகையில் பாஜகவும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வாக்கு எண்ணிக்கையும் தலா 10 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக பின்னடைந்து 9 இடங்களாகக் குறைந்தது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.
9:24 AM IST:
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் நகர்ந்து வருகிறது. முதல்வர் மாணிக் சாஹா பர்தோவாலி தொகுதியில்போட்டியிட்டநிலையில் அவரும் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்.
9:23 AM IST:
Meghalaya Election Results 2023: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ராஜேஷ் மராக் ரொங்காரா சிஜு சட்டமன்றத் தொகுதியில் 155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். என்பிபி வேட்பாளர் ரக்கம் ஏ சங்மா பின்தங்கியுள்ளார்.
9:18 AM IST:
Tripura Assembly Election Result 2023:திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கும் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் நகர்ந்து வருகிறது. பாஜக வீழ்த்தும் நோக்கில் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டபோது, எதிர்க்கட்சி சிம்மாசனத்தை காங்கிரஸ் கட்சி அலங்கரித்தது. திரிபுராவில் எதிர்துருவங்களாக இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியை பொருந்தாக் கூட்டணியாக மக்கள் நினைத்துவிட்டார்கள். பாஜகவீழ்த்த சேர்ந்த இரு கட்சிகளும், வெறும் 15 இடங்களில் மட்டுமே முன்னிலையுடன் நகர்கிறார்கள். இரு கட்சிகளின் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை, நம்பவும் இல்லை.
9:13 AM IST:
Meghalaya Election Results 2023: மேகாலயா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் இதுவரை என்பிபி கட்சி 21இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். என்பிபி கட்சி இங்கு ஆளும் கட்சியாக இருக்கிறது. மீண்டும் கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
9:08 AM IST:
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாகாலாந்தில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மக்களால் துடைத்து எறியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது. இந்தத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுவருகிறது. இந்த முன்னிலையும் சாத்தியமில்லாதபட்சத்தில் மக்களால் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும்
9:05 AM IST:
Nagaland Election Results 2023: நாகாலாந்து மாநிலத்தில் என்டிபிபி கட்சி 30 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், என்பிஎப் 2 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
9:19 AM IST:
Nagaland Assembly election result 2023:நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சி அமைக்க பெரும்மான்மையாக 31 இடங்கள் தேவை. ஆனால், பாஜக, என்டிபிபி கூட்டணி அதைவிட அதிகமாக 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. நாகாலந்தின் ஆளும் என்பிஎப் கூட்டணி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
9:02 AM IST:
டவுன் போர்டோவாலி தொகுதியில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா முன்னிலை வகிக்கிறார்
8:59 AM IST:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திரிபுராவின் அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் பூஜை செய்தனர். அப்போது திரிபுராவில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மாநில பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
8:54 AM IST:
மேகாலயாவில் நடந்த தேர்தலில் 60 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திரிபுரா, நாகாலாந்தில்பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்பது தெரியவந்துள்ளநிலையில் மேகாலயாவில் கடும் இழுபறி நீடிக்கிறது.
இதில் மேகாலாயவில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு கடும் போட்டியாக மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நகர்ந்து வருகிறது. இதனால் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைகிடைக்காத சூழல் உருவாகலாம். அவ்வாறு ஏற்படும்பட்சத்தில் பாஜகவுடன், கான்ராட் சங்மா மீண்டும் கூட்டணி சேர்வார் எனத் தெரிகிறது.
9:19 AM IST:
Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு இணையாக, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டிபோடுகிறது. இரு கட்சிகளும் தலா 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். யுடிபி கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
8:46 AM IST:
திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் பாஜக கூட்டணி 38 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று நகர்ந்து வருகிறது. இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
8:46 AM IST:
தேசிய மக்கள் கட்சி - 19
திரிணாமுல் - 9
பாஜக - 7
காங்கிரஸ் 7
8:44 AM IST:
நாகாலாந்தில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாஜக, என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை எனும்பட்சத்தில் 50 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது பாஜக, என்டிபிபி கூட்டணி
8:35 AM IST:
திரிபுராவில் நடந்த 60 தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக கூட்டணி 32 இடங்களில் முன்னிலைபெற்று, ஆட்சியைத் தக்கவைக்கிறது. நாகாலாந்தில் நடந்த தேர்தல் பாஜக என்டிபிபி கூட்டணி 36 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கிறது.
8:29 AM IST:
திரிபுராவில் நடந்த 60 தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் எதிரும்புதிருமாக இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச்சந்தித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் விபரீதமாக வெளியாகின்றன. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இந்த கூட்டணி 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலைபெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது.
8:26 AM IST:
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக,என்டிபிபி கூட்டணி 29 இடங்களில் முன்னிலை பெற்று நகர்ந்து வருகின்றன. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 29 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையுடன் நகர்கிறது
8:24 AM IST:
நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், என்பிஎப் கட்சி 6 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கின்றன
8:21 AM IST:
நாகாலாந்தில் நடந்த60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக, என்டிபிபி கூட்டணி 16 இடங்களில்முன்னிலை பெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்தக் கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது.
8:28 AM IST:
மேகாலயா மாநிலத்தில் பாஜக 2 இடத்திலும், திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆளும் என்பிபி ஏழு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
8:18 AM IST:
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை காங்கிரஸுடன் கைகோர்த்து இடதுசாரிகள் களம் கண்டனர். ஆனாலும், இந்தத் தேர்தலிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களுக்கு மேல் வெல்லாது எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் திரிபுராவில் பாஜக 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 6இடங்களில் முன்னணியில் உள்ளன.
8:14 AM IST:
திரிபுரா மாநிலத்தில் பாஜக 28 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
8:13 AM IST:
நாகாலாந்து மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 6 இடங்களில் முன்னணியில் உள்ளது.
8:04 AM IST:
திரிபுராவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தேர்தல் நடந்தது. மேகலாயா மற்றும் நாகாலாந்தில் உள்ள தலா 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்தபின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இன்று 3 மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸார், துணை ராணுவப்படையுடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
7:55 AM IST:
பழங்குடியினரின் மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களை யார் கைப்பற்ற போகிறார் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. கருத்துக்கணிப்பில் மூன்றில், இரண்டு மாநிலங்களில் பாஜக முந்துகிறது. மேலும் படிக்க
7:38 AM IST:
நாகாலாந்து மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 184 வேட்பாளர்கள் களத்தில் மோதினர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மேலும் படிக்க
7:21 AM IST:
மேகாலயா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 375 வேட்பாளர்கள் களத்தில் மோதினர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மேலும் படிக்க
7:09 AM IST: