திரிபுரா, நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி… மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உலக மக்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேசிக்கிறார்கள்... இத்தாலி பிரதமர் மெலோனி புகழாரம்!!
திரிபுராவில் ஆட்சியைத் தக்க வைத்தது பாஜக:
திரிபுரா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து தேர்தலை சந்தித்தன. மேலும் புதிய கட்சியான திப்ரா மோதா கட்சியும் இந்த தேர்தலை சந்தித்தது. இதில் பாஜக 32 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்திலும் வென்றி பெற்று 33 இடங்களில் முன்னிலை வகித்தன. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில் 33 இடங்களில் முன்னிலை பெற்று திரிபுராவில் பாஜக 2 ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் 14 இடங்களையும் புதிய கட்சியான திப்ரா மோதா கட்சி 13 இடங்களையும் பெற்று தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பா? கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை!
மேகாலயாவில் தொங்கு சட்டசபை:
மேகாலயாவில் தேமக, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களைப் பெறவில்லை என கூறப்படுகிறது. தேமக 20 இடங்களில் வென்று அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வென்றுள்ளது. இதர வேட்பாளர்கள் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இதனால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனால் மீண்டும் என்பிபி தலைமையிலான கூட்டணி ஆட்சியே மேகாலயாவில் அமையும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாகாலாந்தில் நசுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி: ஒரு இடம் கூட இல்லை!
நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி:
நாகாலாந்தில் பாஜக, நாகா மக்கள் முன்னணி கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் போட்டியிட்டன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.