Telangana Trial by Fire: அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பா? கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சை!
தெலுங்கானாவில் ஒருவர் தனது கற்பை நிரூபிக்க பஞ்சாயத்தார் சொன்னபடி சூடான கம்பியை வெறும் கைகளால் எடுத்து அக்னி பரீச்சையை செய்துள்ளார்.
தெலுங்கானாவில் தம்பிக்கு தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நபர் அவருக்கு அக்னி பரீட்சை வைத்து சோதித்துள்ளார்.
தெலுங்கானாவின் பஞ்சருபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு நபர், தனது மூத்த சகோதரரின் மனைவியுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்க அக்னி பரீட்சை செய்திருக்கிறார்.
சந்தேகப்பட்ட அண்ணன் தனது தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது குற்றம் செய்யவில்லை என்றால் அதை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளார்.
கைமாறிய மனைவிகள்.. கணவர்கள் எச்சரித்தும் விடாத இளைஞர் - கடைசியில் இப்படியா நடக்கணும்.!!
அதன்படி, அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டு வைத்துள்ளனர். நெருப்பில் கிடந்து சூடான அந்த கம்பியை வெறும் கைகளால் எடுத்து அகற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இந்த அக்னி பரீட்சையைச் செய்தவருக்கு கையில் தீக்காயம் ஏற்படாவிட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்பது நம்பிக்கை.
தம்பியும் பஞ்சாயத்தார் சொன்னபடி பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியை வெற்றுக் கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து வீசி அக்னி பரீச்சையை செய்துவிட்டார். பிப்ரவரி 25ஆம் தேதி இந்த அக்னி பரீட்சை நடத்திருக்கிறது. இருந்தாலும் திருப்தி அடையாமல் அவரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
இதனால் அந்த நபரின் மனைவி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் அவர்கள் சொன்னபடி அக்னி பரீட்சை செய்தபோது கையில் தீக்காயம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்துவிட்டார். பிறகும் அவரை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.11 லட்சம் தொகையை பறித்துக்கொண்டனர் என்றும் அதற்குப் பிறகுதான் அக்னி பரீட்சை நடத்த ஏற்பாடு செய்தனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Supreme Court: தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க புதிய குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு